தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!
வணக்கம்! வந்தனம்!
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*தீபம் அறக்கட்டளையின் ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களுக்கு!*
தீபம் நிறுவனர் தீபம் பாலாவின் அன்பு வணக்கங்கள்!!!
🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை தொடர்ந்து 24 ஆண்டுகளாக... (அரசு பதிவு செய்யப்பட்டு 14 ஆண்டு காலமாக ...) தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் - மக்கள் பசி போக்கும் சமுதாயப்பணி செய்து வருவது  தாங்கள் அறிந்ததே. தற்போது தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் ஏறக்குறைய 2000 மக்களின் பசியை தீபம் போக்கி கொண்டிருக்கிறது.

தினமும் வறுமையில் வாடும் மெய்யூர் கிராம பழங்குடி இன ஏழை குழந்தைகளுக்கு மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்படுகிறது. 

பல லட்சம் மக்களின் பசி போக்கும் திருவருட்பிரகாச வள்ளலார் நித்திய தர்மசாலை கட்டிட திருப்பணி, நிதி நெருக்கடியால், கட்டிட பொருட்கள் பற்றாக்குறையால், தாமதமாவதை கண்டு, சிமெண்ட் இல்லாமல் கட்டிடப் பணி தடைபட்டதை அறிந்து, அண்ணாநகர் *திரு N கந்தசாமி ஐயா* அவர்கள் 100 மூட்டை சிமெண்ட் உடனடியாக நன்கொடை வழங்கி மகிழ்வித்தார். 

சரியான நேரத்தில் சரியான நபரிடம் இருந்து சரியான பணிக்கு  இறைவன் திரு கந்தசாமி ரூபத்தில் உதவிய அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் தீபம் அறக்கட்டளை நன்றி பாராட்டி மகிழ்கிறது. வாழ்த்துகிறது.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
இதுவரை தர்மசாலை கட்டிட திருப்பணிக்கு தயா குணம் கொண்ட *44 தீபம் நன்கொடையாளர்கள்* அருள்நிதியாகவும், கட்டிட பொருட்களாகவும் வாரி வழங்கி 75 சதவீத கட்டிட பணிகளை நிறைவு செய்த *வாழும் தெய்வங்களை* வணங்குகிறோம்.

மேலும் கட்டிட திருப்பணி முடிய இன்னும் ரூபாய் 10 லட்சம் தேவைப்படுகிறது. தயா குணம் கொண்ட அருளாளர்கள் முழுமையாகவோ, பகுதியாகவோ திருப்பணியில் பாகம்  செய்து (சிமெண்ட், மணல், மின்சார விளக்குகள், பெயிண்டிங், டைல்ஸ் போன்றவை உபயம் செய்து) ஆன்ம லாபம் பெற்று நீடூடி வாழ பல்லாண்டு வாழ எல்லா நன்மைகளும் பெற்று வாழ தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
      
தினசரி காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மக்களின் பசி போக்கும் தர்மசாலையாகவும், மக்களின் நோய் தீர்க்கும் (வள்ளலார் அருளிய 425 ஞான மூலிகைகளுடன்) மருத்துவ சாலையாகவும்,
ஏழை மாணவர்களின் கல்விக்காக கல்விசாலையாகவும், 
ஆன்மா வழிபாடு ஸ்தலமாகவும், 
தியானம் செய்யும் மௌன ஆலயமாகவும்,
ஆன்மீக நூலகமாகவும், வெளியூரிலிருந்து வரும் சன்மார்க்க அன்பர்கள் தங்குவதற்கும், 
சன்மார்க்க சத்விசார பணிகளுக்கும், 
மருத்துவ முகாம்கள் நடத்துவதற்கும், 
பல்வேறு வகையில் ஜீவகாருண்ய பணிகள் நிகழ்வதற்கு உருவாகும் திருவருட்பிரகாச வள்ளலாரின் திருமாளிகை திருப்பணிக்கு, தாங்கள் தங்கள் சக்திக்கு ஏற்றவாறு தர்மம் செய்து, இறைவனின் அருள் பெற்று உய்யுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.

விருப்பமுள்ள ஆன்மீக அன்பர்கள் தாங்களும், தங்களைச் சார்ந்த உற்றார் உறவினர், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் மூலம் *நிதி திரட்டி, திருப்பணி முழுமை பெற நல்லாதரவு* வழங்குமாறு தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறோம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
தயவுடன்...
தீபம் பாலா
நிறுவனர்
என்றென்றும் சமுதாய சிறு பணியில்...
🌹🌹🌹🌹🌹
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment