29ம் ஆண்டு விழா

29ம் ஆண்டு விழா….

14.09.25 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவில் அருகில் அமைந்துள்ள நித்ய தீப தர்மசாலையில் நாள் முழுவதும்
(காலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை) நடைபெறுகிறது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
அகவலுக்கு இணையான ஞானசரியை 28 பாடல்களைக்கொண்டது. சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையும், 28 ஆண்டுகளாக ஞானவேள்வியை முடித்து, 29 ம் ஆண்டினை துடிப்புடன் தொடங்குதல் கண்டு சன்மார்க்கம் களிப்புறுவதுடன், இதற்கு உறுதுணைநின்ற அனவருடைய அடிகளையும் தொழுது வணங்குகிறது.
💥💥💥💥💥💥💥💥💥💥💥
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், தீபம் நிர்வாகிகள், தீபம் தொண்டர்கள், சன்மார்க்க சம்பந்திகள் ஆண்டு விழாவில் நேரில் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு அழைக்கிறோம்.

சமுதாய பணிகளில் 28 ஆண்டுகள் நிறைவு பெற்று, 29 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தீபம் அறக்கட்டளை, தீபம் வளர்ச்சிக்காக பாடுபட்ட … பாடுபட்டுக் கொண்டிருக்கும்… முன்னாள் இன்னாள் நிர்வாகிகளையும், இரவு பகல் பாராமல் மக்களின் தொண்டே மகேசன் தொண்டு என்று அயராமல் உழைத்த உழைத்துக் கொண்டிருக்கும் முன்னாள் இன்னாள் ஆடுகின்ற சேவடிகளுக்கும், தர்மம் தான் கடவுள்; கடவுள் தான் தர்மம் என்று தீபம் அறக்கட்டளையின் அன்றாட அன்னதான பணிகளுக்கும் அறப்பணிகளுக்கும் தொடர்ந்து 28 ஆண்டுகளாக நன்கொடைகள் வழங்கிய … வழங்கிக் கொண்டிருக்கும் மனித தெய்வங்களையும், தீபம் அறக்கட்டளையின் சமுதாய பணிகளை ஊக்குவித்து வழிகாட்டிய சான்றோர் பெருமக்களையும் (குறிப்பாக தீபம் அறக்கட்டளை நிறுவனருக்கு, சன்மார்க்க உணவை ஊட்டி வளர்த்த, என் உயிரினும் மேலான, தெய்வதிரு R K தாமோதரன் அவர்கள் அனகாபுத்தூர்; தெய்வத்திரு ஈரோடு கதிர்வேலு ஐயா அவர்கள்; உயர்திரு K N உமாபதி அவர்கள், கே கே நகர்; உயர்திரு சாரம் அடிகள்; உயர்திரு நாகை சைவமணி ஐயா அவர்கள்) சன்மார்க்க சம்மந்திகளையும், தீபத்தின் நலம் விரும்பிகளையும், நல்ல உள்ளங்களில் வள்ளலாக இருந்து வழி நடத்தும் எல்லாம் வல்ல இறைவனுடைய திருப்பாதங்களை வணங்கி, இது காறும் தீபம் அறக்கட்டளை பெற்ற பெருமைகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும், புகழையும், விருதுகளையும், அவரவர் பொன்னார் திருவடிகளுக்கு சமர்ப்பித்து மகிழுகிறோம்.

அழைப்பிதழை முடிந்தவரை நேரிலும் தபாலிலும் வழங்கிக் கொண்டு இருக்கிறோம். இருப்பினும் அழைப்பிதழ் வர பெறாதவர்கள், இதையே அழைப்பிதழாக பாவித்து, நமது விழா, நம் தந்தை திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரின் விழா, நமது சக அமைப்பின் விழா, என்ற சகோதர உணர்வோடு, ஆண்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பணிவோடும், அன்போடும் இரு கரம் கூப்பி அழைத்து மகிழ்கிறோம்.

விரிவான தகவல் கொண்ட ஆண்டு விழா அழைப்பிதழை தங்களின் மேலான பார்வைக்காக இணைத்துள்ளோம்.
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏
தொடர்ந்து தங்களின் நல்லாதரவை நாடும்…
ஆண்டு விழா நாளில் தங்களின் வருகையை எதிர்நோக்கி தயவுடன் காத்திருக்கும்…
தீபம் பாலா
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
::: என்றென்றும் சமுதாய சிறு பணியில் 29 ஆம் ஆண்டில்…

Leave A Comment