அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம் “ஆனந்த பூந்தோப்பு”
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
நமது சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையிலும் மற்றும் பல்வேறு கிராம தருமச்சாலைகளின் மூலம் இறையருளாலும், நல்ல உள்ளங்களின் தொடர் நல்லாதரவினாலும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் ஜீவகாருண்ய திருப்பணியை, சமுதாய பணியை, பல்வேறு இன்னல்களுக்கு இடையே கஷ்டங்களுக்கு இடையே இடை நிற்காமல், தடைப்படாமல் மிக சிறப்பாக செய்து வருகிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தினசரி 2000 அன்பர்களின் பசி போக்க நாள் ஒன்றுக்கு Rs 20,000 செலவாகிறது (மாதம் ரூபாய் 6 லட்சத்திற்கு மேல்…). நமது தர்மச்சாலையில் தினசரி மூன்று வேலையும் உணவு வழங்க 2.5 டன் அரிசியும், ₹2.5 லட்சத்திற்கு மளிகை பொருட்களும், ₹80,000 காய்கறிகளுக்கும் செலவாகின்றன.
ஒவ்வொரு மாதமும், மாத கடைசியில் 20 முதல் 30 தேதி வரை நன்கொடைகள் வருவதில்லை. அல்லது குறைவான நன்கொடைகளே வருகிறது…
தற்போது அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் இரு வேளை உணவு வழங்குவதாலும், மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி இருவேளை உணவு வழங்குவதாலும், ஜவ்வாது மலையில் மலைவாழ் மக்களுக்கு தினசரி 1000 அன்பர்களுக்கு தேடிச்சென்று உணவு வழங்குவதாலும், செஞ்சி வட்டம் தேவதானம்பேட்டை கிராமம், ஜோதிமாமலை சன்மார்க்க தோட்ட திட்ட பணிகளுக்கு நிதி தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
தீபம் தாங்கள் “கொடுப்பதை” சமுதாயத்திற்கு உணவாக … உடையாக… மருத்துவமாக… கல்வியாக… நிவாரண உதவியாக… ஆதரவற்றவர்களுக்கு உணவுப் பொருட்களாக… தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. “வைப்பு நிதி” என்று எதுவும் வைப்பதில்லை.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அண்ட அண்டங்களுக்கு அதிபதி. தர்மம் செய்பவர்களை அறிவார். தொடர் தர்மத்தை பின்பற்றுபவர்களை நன்கு அறிவார். தர்மம் செய்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் செய்வார்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சமுதாயத்திற்கு தொடர் ஜீவகாருண்யப்பணிகள் தடைபடாமல், இப்படிப்பட்ட ஒரு புண்ணிய செயலை செய்வதற்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நல்ல மனதையும் இறைவன் தொடர்ந்து தீபத்தின் திருத்தொண்டர்களுக்கும், தீபத்தின் 150 தொடர் மாதாந்திர நன்கொடையாளர்களுக்கும் அருளி இப்பணி தடை வராமல் நடைபெறுவதற்கு மேலும் தொடர் மாதாந்திர கொடையாளர்களை, புண்ணியமூர்த்திகளை நமக்கு அடையாளம் காட்டி, இப்பணியை செவ்வனே செய்ய வேண்டுமென அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் வைத்து வேண்டிக்கொள்கிறோம்.
தீபம் கல்வி நிலையத்தில் 100வது வகுப்பில் ஒழுக்க கல்வி பயின்ற கோவை அவிநாசியை சேர்ந்த திரு அருண்குமார் ஐயா அவர்கள், தர்மச்சாலை கட்டிடம் அமைய லட்ச்சங்களிலும், தொடர்ந்து மாதந்தோறும் நன்கொடை வழங்கும் அருளாளரும், தற்போது கடல் கடந்து அமெரிக்காவில் பொருள் ஈட்டும் திரு K அருண்குமார் ஐயா அவர்கள் இன்று ₹9001 நன்கொடை வழங்கியது இறைவனின் திரு உள்ளம். அருளாளர்களை வாழ்த்துகிறோம். திருப்பாதங்களை வணங்குகிறோம்.
தொடர் தர்மம் செய்வோம்!
தயவுடன் வாழ்வோம்!
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
தயவுடன் …
என்றென்றும் சமுதாய சிறு பணியில் … 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை வேளச்சேரி சென்னை
Gpay: 9444073635