01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்

  • Home
  • MEIYUR
  • 01.03.2025 – கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்

கிராம குழந்தைகளுடன் ஒரு நாள்
🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢🌟🟢
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஏழை பழங்குடியின குழந்தைகளுக்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு இன்னல்களுக்கிடையே இடைநில்லா தடையில்லா தினசரி உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே.

அவ்வப்போது மெய்யூர் கிராமத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள 100 ஏழை குடும்பங்களுக்கு நம்மாலான வாழ்வாதார உதவியாக அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி வருகிறோம்.

மேலும் மார்ச் 1 சனிக்கிழமை அன்று, மெய்யூர் கிராமத்தில் வாழும் 50 குடும்பங்களுக்கு சிறு வாழ்வாதார உதவி மற்றும் குழந்தைகள் உட்பட அனைவருக்கும் நேரில் சென்று சிறப்பு உணவு (இனிப்பு வடையுடன்) வழங்க வழங்க திட்டமிட்டுள்ளோம்.

உதவும் நல்லுள்ளங்கள்
👉அரிசி உபயம்: திரு V பவானி சங்கர் ஐயா
👉 என்னை பருப்பு உபயம் திருமதி உமாதேவி
👉குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் திரு N கந்தசாமி ஐயா அவர்கள்
👉 சிறப்பு உணவு உபயம்: திரு R ராஜா ராமன் அவர்கள்
👉 50 போர்வைகள் உபயம்: திரு P கருணாகரன், வேளச்சேரி

ஏழை குடும்பங்களுக்கு உதவி கரம் நீட்டி, குழந்தைகளுக்கு சிறப்பு உணவு வழங்கி மகிழ்ச்சி அடைய, நேரில் வர விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே தெரிவிக்கவும். வாகன ஏற்பாடு செய்ய தீபம் அறக்கட்டையை தொடர்பு கொள்ளவும்.

மெய்யூர் கிராம குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்க நாளொன்றுக்கு: ₹5k.

குழந்தைகளுக்கு தினசரி உணவுக்கு உபயம் செய்ய விரும்பி வழங்கும் நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.
🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏🌻🙏
தயவுடன் …
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment