சன்மார்க்க பாதையில் ஜீவகாருண்யப் பணியாக, தினசரி மக்கள் பசிபோக்கும் ஆன்மநேயப் அறப்பணியில் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பல்வேறு கிராம தருமச்சாலைகள் மூலம் தினசரி 2000 மக்களின் பசி போக்கிக்கொண்டிருக்கிறது
11.08.2022 - வியாழக்கிழமை, பௌர்ணமி, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில், திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.

389 வது வார
அகவல் பாராயணம்
📔📔📔📔📔📔📔📔📔
04.08.2022 - வியாழக்கிழமை, குரு வாரத்தை முன்னிட்டு, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
28.07.2022 - இன்று குரு வாரத்தை முன்னிட்டு, மாத பூச நாளிலே, சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில்
மாலை 6 மணி அளவில் திரு அகவல் பாராயணம், கூட்டு பிரார்த்தனை, ஜோதி வழிபாடு, அன்பர்களுக்கு இரண்டு வகையான பிரசாதம் வழங்குதல் மற்றும் தொடர் பசியாற்றுவித்தல் நடைபெறுகிறது.
நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
புதன்கிழமை இரவு(27.07.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார்.
24.07.2022-இன்று நமது தீபம் அறக்கட்டளையின் சார்பில் நடமாடும் தருமச்சாலை மூலம் சென்னை சாலையோரம் பசியால் வாடும் ஆதரவற்ற எளியோருக்கு உணவு பொட்டலங்களையும், தண்ணீர் பாட்டில்களையும்,
வாழைப் பழங்களையும், புத்தாடைகளையும், டாட்டா ஏஸ் வாகனத்தில் தேடிச்சென்று வழங்கப்பட்டது.