Month: June 2021

மெய்யூர் கிராம சேவை

தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணியாக கொரோனா ஊரடங்கால் கூலி வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட, 100 மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின குடிசைகளில் வாழும் மக்களுக்கு 10 கிலோ முதல்தர அரிசியும் 22 வகையான மளிகைப் பொருட்களும், பழைய ஆடைகளும், சுவையான உணவும், குழந்தைகளுக்கு பிஸ்கட் இனிப்பும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் நேரடியாகச் சென்று அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கியது அற்புதமான சமுதாயப்பணி. மேலும் கிராம மக்களுக்கு சுவையான சூடான உணவு வழங்கியது மகிழ்ச்சி.
Read more

மெய்யூர்

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் மிக மிக ஏழ்மை நிலையில் உள்ள 100 பழங்குடி இன குடும்பங்களுக்கு கீழ்கண்ட 23 வகையான நிவாரண பொருட்களை தீபம் அறக் கட்டளை வரும் சனிக்கிழமையன்று (19.6.21) நேரில் சென்று அவரவர் குடிசையில் வழங்கயிருக்கிறது. திரு கந்தசாமி ஐயா முழு அரிசி உபயம் (1 டன்) ஏற்றுக்கொண்டு ₹40,000 நிதி வழங்கி இருக்கிறார். மற்ற மளிகைப் பொருட்களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்
Read more