*200 ஏழை குடும்பங்களுக்கு 2 டன் அரிசி உதவி - 7.8.21*
கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடிசைகளில் வாழும் 200 கிராம குடும்பங்களுக்கு (காரப்பாக்கம், மாமண்டூர், மெய்யூர், மப்பேடு கிராமங்கள், திருவள்ளூர் மாவட்டம்) நாளை சனிக்கிழமை 7.8.2021 ஒவ்வொரு குடும்பத்திற்கு தலா 10 கிலோ அரிசி வீதம் 200 குடும்பங்களுக்கு (2000 கிலோ அரிசி) தீபம் அறக்கட்டளை *நேரில் சென்று* அரிசி வழங்குகிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.
தீபம் அறக்கட்டளையின் அனைத்து சமுதாய பணிகளிலும் அரணாக தூண்களாக விளங்கும் தீபம் அறக்கட்டளையின் அருளாளர்களை, *நன்கொடையாளர்களை,* நலம் விரும்பிகளை, வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.
தயவுடன் ...
என்றென்றும் சமுதாய சிறு பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635