📗📗📗15ஆம் ஆண்டு 📗📗📗
90 ஏழை எளிய மாணவர்களுக்கு 9 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது…
📢📢📢📢📢📢📢📢
திருவருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், நல்லுங்கொண்ட நன்கொடையாளர்களின் தொடர் தயவினாலும், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று, மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
2024-25 ஆம் கல்வி ஆண்டில் 28.7.24 நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று உயர் நீதிமன்ற நீதி அரசர் திரு வள்ளிநாயகம் ஐயா அவர்கள் தலைமையில், சாய் டிவி நிறுவனர் திரு கணேஷ் ஐயா அவர்கள் முன்னிலையில், மருத்துவ மாணவர்கள் உட்பட முதல் கட்டமாக 90 மாணவ மாணவிகளுக்கு பெற்றோர்கள் முன்னிலையில், ₹9 லட்சத்திற்கு கல்வி உதவித்தொகை கல்லூரி பெயரில் காசோலையாக வழங்கப்பட்டது.
கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வை சாய் டிவி நிறுவனமும், நியூஸ் 7 நிறுவனமும் செய்தி சேகரித்து வெளியிட்டன. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பெற்றோர்களுக்கும், அனைத்து நன்கொடையாளர்களுக்கும் காலை உணவும் மதிய உணவும் சிறப்பு உணவாக வழங்கப்பட்டது.
இச்சமுதாய நிகழ்வில் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களும் தீபம் நிர்வாகிகளும் தீபம் திரு தொண்டர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
மாணவ மாணவிகள் உயர் கல்வி பயில இதுவரை நன் கொடை வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும், இந்த கல்வி ஆண்டில் 90 மாணவர்கள் கல்வி பயில உதவிக்கரம் நீட்டிய 37 ஈர நெஞ்சினருக்கும் எமது மனமார்ந்த நன்றியும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். தர்மம் செய்து வாழக்கூடிய தயவாளர்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு, தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 15 ஆண்டுகளாக 1,350 – மாணவ, மாணவியர்களுக்கு ரூ.80 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
🌹🌹🌹🌹🌹🌹
🌷🌷🌷🌷🌷🌷
பேராசிரியர் K முத்துக்குமரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட 5 பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக மாணவர்களுடன் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்தப்பட்டு, மாணவ மாணவிகளின் பொருளாதார நிலையை உறுதி செய்யப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவச் செல்வங்களுக்கு முதல் கட்டமாக கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தீபம் அறக்கட்டளை வழங்கும் 15-ம் ஆண்டு இரண்டாம் கட்ட கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய், தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
☹☹☹☹☹☹☹☹☹☹
தாயை இழந்த,
தந்தை இழந்த,
அல்லது தாய் தந்தை இல்லாத, பார்வை இல்லாத,
ஆதரவில்லாத
மாணவ மாணவிகள் அறக்கட்டளையின் கல்வி உதவி வேண்டி விண்ணப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால் அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற பயனடைவார்கள்.
ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு இறை இன்ப நிறை வாழ்வு கிட்டும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற ஓர் ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனம் என்பதால், ரொக்க நன்கொடைகளை முழுமையாக தவிர்க்கவும்:
Gpay: 9444073635
Donations by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Draft in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust,
No.7, புத்தேரி கரை தெரு
வேளச்சேரி சென்னை 42
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Donation by Bank Transfer:
Account Name: Deepam Trust
Account No : 30265475129
Bank :State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
வங்கிப் பரிமாற்றம் செய்தபின் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு sms அல்லது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
🙏🙏🙏🙏🙏
தீபம் பாலா
நிறுவன தலைவர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அறத் தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 27 ஆண்டுகளாக…)
🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும் : https://deepamtrust.org/education
கடந்த வருடங்களில் நடைபெற்ற ஓரிரு கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்:
9 ஆம் ஆண்டு:
https://youtu.be/ypdlC1vnR7k
8 ஆம் ஆண்டு:
https://youtu.be/9yTgPCPZosE