11.08.2022 – 13ஆம் ஆண்டு 100 ஏழை எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க – நேர்காணல்.
திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் பெருங்கருணையுடன், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் படிப்பில் நன்றாக தேர்ச்சி பெற்று மேல்படிப்பு தொடர முடியாத (Diploma, Degree, Engineering, Medical) 100 கிராமப்புற ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்கள்.
சென்ற வருடம் கொரோனா பேரிடர் காலத்திலும் 8 மருத்துவ உட்பட 60 மாணவர்களுக்கு உதவியது மட்டில்லா மகிழ்ச்சி.
வாரி வழங்கும் கல்விச் செம்மல்களாகிய தங்களின் பெருந்தயவோடு, தீபம் அறக்கட்டளையின் சார்பில் இதுவரை கடந்த 12 ஆண்டுகளாக 1109 – மாணவ, மாணவியர்களுக்கு ரூ.61,25,165/- கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
2022-23 கல்வியாண்டில் பெற்ற மொத்த விண்ணப்பங்கள் 156. முதல் கட்ட நேர்காணலுக்கு அழைக்கப்பட்ட மாணவ மாணவிகள் : 100
நேர்காணல் தேதி: 9.8.22
நேரம் : காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம்: நித்திய தீப தர்மசாலை புத்தேரி கரைத் தெரு, தண்டீஸ்வரர் கோவில் அருகில், வேளச்சேரி.
பேராசிரியர் K முத்துக்குமரன் தலைமையில் மூன்று பேர் கொண்ட 3 பேராசிரியர்களின் குழுக்கள் மூலமாக மாணவர்களுடன் பெற்றோர்களுடன் நேர்காணல் நடத்த உள்ளோம். தேர்ந்தெடுக்கப்படும் மாணவச் செல்வங்களுக்கு 13.8.22 சனிக்கிழமை கல்வி உதவித்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம்.
தீபம் அறக்கட்டளை வழங்கும் 13-ம் ஆண்டு கல்வி உதவித்தொகைக்கு, தாங்களும் பாகம் பெற்று, ஓர் ஏழை மாணவர் அல்லது மாணவியின் எதிர்காலத்திற்கு வழி தந்து, அவர்களின் வாழ்விற்கு ஒளியேற்றிட, கல்விக்கான உதவித்தொகை வாரி வழங்கிட வேண்டுமாய் தங்களை அன்புடன் வேண்டி விண்ணப்பிக்கின்றோம்.
தாயை இழந்த,
தந்தை இழந்த,
அல்லது தாய் தந்தை இல்லாத, பார்வை இல்லாத,
ஆதரவில்லாத
மாணவ மாணவிகள் அறக்கட்டளையின் கல்வி உதவி வேண்டி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால் அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற பயனடைவார்கள்.
ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு இறை இன்ப நிறை வாழ்வு கிட்டும்.
நேர்காணலில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை கல்லூரியின் பெயரில் காசோலையாக மட்டுமே அளிக்கப்படும் என்பதை நன்கொடையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.
ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்:
Gpay: 9444073635
Donations by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai – 600 042
Donation by Bank Transfer:
Account Name: Deepam Trust
Account No : 30265475129
Bank :State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
வங்கிப் பரிமாற்றம் செய்தபின் நன்கொடையாளர்கள் தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு sms அல்லது வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அறத் தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 25 ஆண்டுகளாக…)
மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும் : http://deepamtrust.org/social-activities/
கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்:
9 ஆம் ஆண்டு:
https://youtu.be/ypdlC1vnR7k
8 ஆம் ஆண்டு:
https://youtu.be/9yTgPCPZosE