*வள்ளலார் தர்மசாலை மற்றும் ஞான சபை புதிய கட்டடம் திறப்பு விழா* - *14 & 15 ஏப்ரல் 2022 (வியாழன் & வெள்ளி)* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சென்னை வேளச்சேரியில் 1200 ஆண்டுகள் பழமையான (9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட) தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிகரைத்தெரு எனும் வள்ளலார் தருமச்சாலை வீதியில், *திருவருட்பிரகாச வள்ளலார் பேரருள் பெரும் கருணையினால்,* தர்மசாலை மற்றும் ஞான சபைக்கென புதிய கட்டடம் அமைத்து, அதை எதிர்வரும் புத்தாண்டான 2022 ஏப்ரல் 11, 12, 13 தொடர்ந்து மூன்று நாட்கள் திருவருட்பா ஆறு திருமுறைகள் (6000 பாடல்கள்) முற்றோதலும், *ஏப்ரல் 14 & 15 தேதிகளில் திறப்பு விழாவும்,* சிறப்புடன் நடைபெற இருப்பதால், இந்த திறப்பு விழாவினை அனைத்து நன்கொடையாளர்களும், ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பு உள்ளங்களும், தீபம் நிர்வாகிகளும், தீபம் தொண்டர்களும், தீபத்தில் பயின்ற மாணவர்களும், பிற ஊர்களிலமைந்த சன்மார்க்க சங்கத்தவரும் கலந்துகொண்டு, சீரும் சிறப்புமாய் நடத்தித் தருமாறு வேண்டுகிறோம். ஏராளமான எண்ணிக்கையில் சன்மார்க்க சம்பந்திகள் விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இந்த அற்புத விழாவிற்கு, அழைப்பிதழ் தயாராகிக் கொண்டிருக்கிறது. விழாவை சிறப்பிக்க/சிறப்பாக்க நிதியும், பொருளும், உடலுழைப்பு உதவியும், தேவைப்படுகிறது. தயா உள்ளம் கொண்ட அருளாளர்கள் அவரவர் சக்திக்கு ஏற்ப, விழா உபயங்களை ஏற்று, ஆன்ம லாபம் பெற்றுய்யுமாறு தீபம் தங்களை அன்போடு வரவேற்கிறது. 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *உபய விவரம்:* 1) 2000 விழா பத்திரிக்கை உபயம் : *திரு அருள் நாகலிங்கம் அவர்கள்,* ஈரோடு 2) கும்பாபிஷேகம் 10 கலசங்கள்: (1 கலசம் ₹3000 முதல் ₹5000 வரை) - 10 கலசம் உபயம்: *பெயர் குறிப்பிட விரும்பாத நபர்* 3) ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் சலவைக்கல்லில் உருவாக்கப்பட்ட 7 அடி முழுவடிவ திருவருட்பிரகாச வள்ளலார் சிலை உபயம்: *திரு S டெல்லி பாபு ஐயா* அவர்கள், வேளச்சேரி. 4) 15 அடி உயரமுள்ள கலை வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவு வாயில் உபயம்: (₹3 லட்சம்) a) *திரு N கந்தசாமி* அவர்கள், b) *திரு G பாண்டியன்* அவர்கள், IOC. 5) நுழைவாயில் கேட் உபயம்: (₹1.5 லட்சம்) *பேராசிரியர் G ஜெயராமன், அவர்கள்,* ரங்கராஜன் அறக்கட்டளை, கோடம்பாக்கம். 6) 1000 மஞ்சள் பை உபயம்: (₹10,000) - *திரு S கோபால் அவர்கள்* 7) மூன்று வகையான ஸ்வீட் உபயம்: 8)10 கலசங்களுக்கு பஞ்சலோக உபயம்: (₹1 லட்சம்) *திருமதி T உமா அம்மையார் அவர்கள்,* மேடவாக்கம். 9) 3 நாட்கள் முற்றோதல் வாசிக்கும் சன்மார்க்க சான்றோர்களுக்கு அன்ன உபயம்: 10) 14 ஏப்ரல் 2022 - 3 வேளை சிறப்பு அன்னம் உபயம்: 11) 15 ஏப்ரல் 2022 - 3 வேளை சிறப்பு அன்னம் உபயம்: 12) 2 நாள் புஷ்பம் உபயம்: *திரு N கந்தசாமி ஐயா அவர்கள்* 13) வள்ளலார் வீதியுலா உபயம்: *திரு N கந்தசாமி ஐயா அவர்கள்* 14) விழா பந்தல் உபயம்: 15) அலங்கார மின் விளக்குகள் உபயம்: 16) நாதஸ்வர இசை உபயம்: *திரு N கந்தசாமி ஐயா அவர்கள்* 17) பரிசு பொருட்கள், விருதுகள் உபயம்: 18) ஆறு திருமுறைகள் திருவருட்பா புத்தகங்கள் 20 செட் உபயம்: *திரு R காந்தி ஐயா அவர்கள்* 20) 21 அடி செப்பு தகடு களால் ஆன சன்மார்க்க கொடிக்கம்பம் உபயம்: *திரு A G பாண்டுரங்கன் ஐயா அவர்கள்* 21) வெளி வழி ஒளி அருள் ஆலயம் கோபுர உபயம்: 22) ஞான பீடம் உபயம்: 23) 100 அகவல் பாராயணம் புத்தகங்கள் உபயம்: 24) 100 தீபம் திருத்தொண்டர்கட்கு T-ஷர்ட் உபயம்: திருவருட்பிரகாச வள்ளலார் நித்திய தீப தர்மசாலை மற்றும் ஞான சபை திறப்பு விழாவிற்கு உபயம் செய்ய விருப்பம் உள்ள அன்பர்கள், மேலும் விபரங்களுக்கு, தீபம் அறக்கட்டளையைத் தொடர்பு கொள்ளவும். 💐💐💐💐💐💐💐💐💐💐 தயவுடன்... என்றென்றும் சன்மார்க்க திருப்பணியில்... *தீபம் அறக்கட்டளை* 9444073635 (12 கிராம தர்மசாலைகள் மூலம் தினசரி 2000 அன்பர்களுக்கு பசியாற்றுவித்தல் செய்யும் ஓர் அரசு பதிவுபெற்ற 80G வரி விலக்கு அளிக்கப்பட்ட தர்ம ஸ்தாபனம்)
06
Mar, 22