*வறுமை கொடியது.* *இளமையில் வறுமை அதனினும் கொடியது.* 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தீபம் அறக்கட்டளை கடந்த 15 மாதங்களாக கொரோனா கொடும் தொற்று ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து, தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கியமான, சுவையான, மதிய உணவு வழங்கி வருவது தாங்கள் அறிந்ததே. இதற்கான மாதாந்திர செலவு₹40,000/-. 💥💥💥💥💥💥💥💥💥💥 மெய்யூர் கிராம காப்பு காடுகளை ஒட்டி வாழக்கூடிய எழுபதுக்கும் மேற்பட்ட பழங்குடி இன குடும்பங்கள் மிகவும் வறுமையில் வாடுவதை நேரில் கண்ணுற்று அவர்களின் குழந்தைகளுக்கு 2 வயது முதல் 10 வயதுக்கு உட்பட்ட வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு (படங்களை இணைத்துள்ளோம்) தினசரி இரவு உணவு வழங்க தீபம் அறக்கட்டளை நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது. தினசரி பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் ஏறக்குறைய 2000 மக்களின் பசியைப் போக்கக் கூடிய தீபம் அறக்கட்டளை, தற்போது தர்மசாலை கட்டிட திருப்பணியும் செய்து கொண்டிருப்பதால், மிகமிக பொருளாதார நெருக்கடியில் இருப்பினும், வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு, தினசரி ஒரு வேளை உணவாவது சூடாக சுவையாக சுகாதாரமாக அன்பாக வழங்க வேண்டும் என்ற சமுதாய அக்கறையாக வரும் ஜூலை மாதம் 10ம் தேதி முதல் இரவு உணவு வழங்கயிருக்கிறோம். Meyyur கிராம தரும சாலையில் இரவு உணவு தயார் செய்து 2-3 கிலோ மீட்டர் காட்டு பகுதியில் குழந்தைகளுக்கு தினசரி வழங்கப்படும். ஒரு குழந்தைக்கு வயிறார உணவு வழங்க ரூபாய் 10 முதல் 12 வரை மட்டுமே ஆகிறது. 100 குழந்தைகளுக்கு உண விட ₹1,000 முதல் 1,200 வரை தினசரி கூடுதல் செலவாகும். மாதம் ரூபாய் ₹30,000 வரை கூடுதல் செலவு ஆகும். 💐💐💐💐💐💐💐💐💐 தயா குணம்கொண்ட செல்வந்தர்கள் அல்லது குழந்தைகள் ஒருவேளை பசியாற வேண்டும் என்ற தெய்வீக குணம் கொண்ட சமுதாய சிந்தனையாளர்கள் அல்லது தீபம் அறக்கட்டளையின் நிரந்தர நன்கொடையாளர்கள் இந்த அன்னம் பாலித்தல், குழந்தைகளின் பசி போக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு ஒருவேளை அல்லது அவரவர் சக்திக்கு ஏற்ப அருள் நிதி வழங்கி இறைவனுடைய அருள் பெற்று ஆன்ம லாபம் அடைய எல்லா நன்மைகளும் பெற்று வாழ தீபம் அறக் கட்டளை அன்போடு அழைப்பு விடுக்கிறது. மெய்யூர் கிராமத்தில் காப்பு காடுகளில் வாழும் பழங்குடியின குழந்தைகளின் ஒரு சில படங்களை தங்களின் பார்வைக்காக இணைத்துள்ளோம். இது விளம்பரம் அல்ல. வியாபாரமும் அல்ல. சமுதாய திருப்பணி. குழந்தைக்கு வழங்கும் உணவு இறைவனுக்கே வழங்கிய உணவாகும். குழந்தையும் தெய்வமும் ஒன்று. தங்களின் மேலான நல்லாதரவை நாடி நிற்கும்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுடன் *தீபம் அறக்கட்டளை* ஓர் அரசு பதிவு பெற்ற வருமான வரி விலக்கு பெற்ற சமுதாய அறத் தொண்டு நிறுவனம் (1997 முதல்...25 ஆண்டுகளாக சமுதாயப்பணியில்...)
28
Apr, 22