மாத பூசம்: ஞாயிற்றுக்கிழமை *நாள்: 10.04.2022* *சனிக்கிழமை இரவு(09.04.22) 9 மணி அளவில் வேனில் வடலூர் பயணம். கட்டணம் இல்லை.* 🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 திருவருட்பிரகாச வள்ளலார் ஏற்றி வைத்த சத்திய தருமச்சாலை அடுப்பில், பூச நாளில், கடந்த 116 ஆண்டுகளாக வடலூர் சத்திய தருமசாலையை 3 தலைமுறைகளாக பொறுப்பேற்று நடத்தும் நாகப்பட்டினம் அகல்விளக்கு சன்மார்க்க சங்க சம்பந்திகளுடன், நாள் முழுவதும் அன்னதான தொண்டு செய்யக் கூடிய சிறு பாக்கியத்தை, பெருமானார் தீபத்திற்கு வழங்கியிருக்கிறார். *106 மாதங்களாக ...(9 வருடங்களாக) வடலூர் சத்திய தருமச்சாலையில் தொடர் தொண்டு... காய்கறி வெட்டுதல்... பாத்திரங்கள் கழுவுதல்... சமையல் செய்தல்... நாள் முழுதும் ஆயிரக்கணக்கான அன்பர்களுக்கு உணவு பரிமாறுதல்...* 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 வேன் புறப்படும் *நாள்*: 09.04.22-சனிக்கிழமை *நேரம்* : இரவு 9 மணி *இடம்*: நித்ய தீப தர்மசாலை, தர்மசாலை வீதி, வேளச்சேரி சென்னை. *வேனுக்கு கட்டணம் இல்லை.* விருப்பமுள்ளவர்கள் நன்கொடைகள் வழங்கலாம் அல்லது வேன் வாடகை ₹9,500ஐ ஏற்றுக்கொள்ளலாம். 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 தீபம் அறக்கட்டளையின் அறங்காவலர் *திரு V பாரதி* ஐயா அவர்கள் தலைமையில், சனிக்கிழமை இரவு தொண்டு செய்ய தீபம் தொண்டர்களுடன் வேன் புறப்படுகிறது. "சுற்றுலா அல்லது பொழுது போக்கிற்கான இடம் அல்ல... சேவை செய்யும் எண்ணம் உடையவர்கள், வடலூர் ஞானசபையில் *ஜோதி தரிசனம்* காண விருப்பமுள்ளவர்கள் மட்டும் வரவும்". 💥💥💥💥💥💥💥💥💥 தொண்டு செய்ய ஒன்றிணைவோம்! தொண்டு செய்வோம்! நீண்டு வாழ்வோம்! 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 விருப்பம் உள்ள நிர்வாகிகள், விருப்பமுள்ள தொண்டர்கள், இக்குழுவில் விருப்பமுள்ளவர்கள், அன்னதான தொண்டில் பங்கெடுத்துக் கொண்டு, ஆன்ம லாபம் பெற தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தயவுடன் ... என்றென்றும் சன்மார்க்க பணியில்... *தீபம் அறக்கட்டளை* வேளச்சேரி சென்னை
07
Apr, 22