தேவதானம் பேட்டை

செஞ்சி வட்டம் எங்களது தேவதானம் பேட்டை சொந்த கிராமத்தில் எனதருமை உடன்பிறப்பு மு.அபிராமி தினந்தோறும் மதிய வேளையில் பசித்தவர்களை தேடிச்சென்று தலையில் கூழ் சுமந்து, உணவு வழங்கி வருகிறார்கள்.

இப்படி இந்த அற்புத நிகழ்விற்க்கு சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் தயவு உள்ளம் கொண்ட பாலகிருஷ்ணன் அய்யாவும், அய்யாவின் துணைவியார் புஷ்பா அம்மையார் அவர்களின் தயவினால், மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

எனவே அய்யாவும் அம்மையாரும், நீண்டு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள்புரியவேண்டும் என்று இந்த நேரத்தில் விண்ணப்பம் வைக்கின்றேன்.

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.

இளவரசன் அண்ணாமலை

Leave A Comment