டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

  • Home
  • NATURAL CALAMITIES
  • டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

25.11.2018 – டெல்டா மாவட்டங்களில் தீபத்தின் சேவை

 
இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்…
 
தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.
சென்னையில் இருந்து அன்னதான பொருட்களுடன்   பல்வேறு நிவாரண பொருட்களையும் அரிசி – 200 மூட்டைகள் (5 டன்),
IIT T-ஷர்டுகள்,
டவல்கள்,
மெழுகுவர்த்திகள்,
பிரட்டுகள்,
பிஸ்கட்டுகள்,
வாட்டர் பாட்டில்கள்,
வாட்டர் பாக்கட்டுகள்,
போர்வைகள்,
ஒரே சமயத்தில் 5000 பேருக்கு சமைக்க தேவையான சமையல் பாத்திரங்கள்,
6 அடுப்புகள்,
15 கேஸ் சிலிண்டர்களை
சுமந்து கொண்டு
கடந்த 21-11-2018 அன்று இரவு (புதன்கிழமை) நாகப்பட்டினம் புறப்பட்டது.
 
 
 
நாகப்பட்டினம் சன்மார்க்க சங்க தருமச்சாலையில் உடனடியாக முகாமிட்டு அன்னதானப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு சமையல் வேலைகள் விரைவுபடுத்தப்பட்டது.
 
கடந்த 21 ம் தேதி முதல் தொடர்ந்து இரவு பகலாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இரவு பகல் பாராது நாகப்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளிலும், வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளிலும் தொடர்ந்து நான்கு நாட்களாக தடையின்றி உணவு, உடை, மற்றும் பல்வேறு நிவாரண பொருட்களான மெழுகுவர்த்தி புத்தாடைகள், டவல்கள், டி-சர்ட்,  போர்வைகள் வழங்கப்பட்டன.
 
 
 
தீபம் அறக்கட்டளையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகின்ற சேவடிகளும்,  நாகை மாவட்ட 20 க்கும் மேற்பட்ட  சன்மார்க்க ஆடுகின்ற சேவடிகளும் இரவு பகல் பாராமல் தொடர்ந்து சமையல் செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். தொடர்ந்து கிராம, கிராமங்களாக பசித்தவர்களை தேடிச்சென்று வாகனங்கள் மூலம்  அன்னதர்மம் வழங்கப்பட்டது.
 
மிகமிக மோசமான உருக்குலைந்து போன வீடுகள் மிகமிக அதிகம்.  கண்ணீர் விட்டு கதறி அழுதவர்கள் அதிகம். 
ஏராளமான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின்  உதவிகள் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் தேவை மிகமிக  அதிகம்.
அரசாங்கம் மட்டும் தான் அவர்களின் முழு தேவைகளை பூர்த்தியை செய்ய முடியும்.
 
பல இடங்களில் பல்வேறு வகையான உதவிகளை செய்த போது பல பொருட்கள் இல்லாமல் ஒன்றும் செய்வதறியாது திகைத்து நின்றோம்.
 
பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அன்னதான பொருட்கள், நிவாரணப் பொருட்களை சென்னையில் இருந்து  கொண்டு சென்று இருந்தும், புதுச்சேரியில் இருந்து 1 டன் அரிசி  மூட்டைகள் உள்பட நிவாரண பொருட்கள், கடலூரில் இருந்தும் நிவாரண பொருட்கள், ஈரோட்டில் இருந்து அரிசி, போர்வைகள்,
மதுரையில் இருந்து  நிவாரண பொருட்கள் தீபம் அறக்கட்டளைக்கு வந்து குவிந்தது மகிழ்ச்சி அளித்தது.
 
 
 
தொடர்ந்து நாகப்பட்டினத்தை சுற்றி அன்னதானமும், புதுக்கோட்டையை சுற்றி உள்ள வடகாடு உள்பட பல கிராமங்களில் 30-40 முகாம்கள் மூலமும், கிராமம், கிராமமாக, வீடு வீடாக இரவில், இருட்டில், உணவும், மெழுகுவர்த்திகளும் தந்தபோது, தீபமும் ஆயிரக்கானவர்களில் இல்லங்களில் விளக்கேற்றிய உணர்வும், நாமும் புயலால் பாதிக்கப்பட்ட சில ஆயிரம் குடுபங்களுக்கு உதவ முடிந்ததே என்ற நிறைவோடு
இன்று காலை சென்னை திரும்பினோம். 
 
பெரும்பாலான நேரங்களில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும், இரவு பகல் பாராமலும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
 
சமையலுக்கு தேவையான காய்கறிகளை பற்றாக்குறை ஏற்பட்ட போது நாகப்பட்டினம் மார்க்கெட்டில் மீண்டும் மீண்டும் டாடா ஏஸ் வாகனம் முழுவதும் காய்கறிகள் வாங்கப்பட்டது.
 
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் கண்ணீரை துடைக்க முடியாமல் பல சமயங்களில் விக்கித்துப் போய் நின்றோம்.
 
தீபம் அறக்கட்டளை தனது பணியை செவ்வனே செய்து வள்ளல்பெருமான் கண்ட ஜீவகாருண்ய புரட்சியை மீண்டும் நிலை நாட்டியுள்ளது.

பல லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்களை வாரி வழங்கிய கொடை வள்ளல்களையும், (நிதியாக பொருளாக உதவியவர்களுக்கு  நன்றி செய்தியும், பதிவு செய்த சில படங்களையும், வீடியோ காட்சிகளையும் தனியாக அனுப்ப உள்ளோம்.) நான்கு நாட்களாக இரவு பகல் பாராமல்  தொய்வின்றி சமையல் பணிகளை செய்த ஆடுகின்ற சேவடிகளுக்கும் தீபம் அறக்கட்டளை தனது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
 
 
 
டெல்டா மாவட்ட மக்களின் துயரை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாமல் கண்ணீருடன் டெல்டா மாவட்ட மக்களை பிரியமுடியாமல் பிரியாவிடை பெற்றோம்.
 
அடுத்த கட்ட நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வந்தாலும் மீண்டும் டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தீபம் தொடர்ந்து பாடுபடும்.
 
என்றென்றும் ஆன்மநேய அறப்பணியில் 
உங்கள் வேளச்சேரி 
தீபம் அறக்கட்டளை
21 ஆண்டுகளாக சமுதாயப்பணியில்...
9444073635
www.deepamtrust.org
 

Leave A Comment