நம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாளான ஆடி அமாவாசை வரும் 28.7.2022 ஆம் ஆம் தேதி வருகிறது. வருடத்தின் முதல் மஹாளய அமாவாசை நாளான இந்த நாள் முன்னோர்களை நினைத்து வணங்கி அவர்களுக்கு திதி கொடுக்கலாம் மற்றும் அன்னதானம் வழங்கலாம். இதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். பித்ரு தோஷம் நீங்க அன்னதானம் சிறந்த வழியாகும்.
நம் முன்னோர்கள் ஆத்ம சாந்தி அடைய அன்னதானம் செய்வதன் மூலம் தோசங்கள் நீங்கி, புண்ணியாத்மாக்களின் ஆசீரும், குடும்பத்தினர் நோய் நொடி இல்லாமல் சுபிக்ஷமாக வாழ்வும், குடும்பத்தில் அமைதி நிலவும். எனவே வரும் ஆடி அமாவாசை நாளில் நாம் மறக்காமல் அன்னதானம் வழங்குவோம்