ஓர் ஏழை மாணவிக்கு ₹10,000/- கல்வி உதவி
இதுவரை தீபத்தில் கல்வி உதவி பெற்ற மாணவர்கள்: 1108.
மொத்த கல்வி உதவி: ₹61 லட்சம்.
வருடந்தோறும் சமுதாயத்தில் வறுமை நிலையிலுள்ள 100 ஏழை எளிய கிராமப்புற மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் மேற்படிப்புக்கு (டிப்ளமா, டிகிரி, இன்ஜினியரிங், மருத்துவம்) தீபம் அறக்கட்டளை வருடந்தோறும் நல் உள்ளங்களின் பேராதரவுடன் கல்வி உதவி வழங்கி வருகிறது.
மாணவி J ஹேமலதா தந்தையை இழந்த மாணவி.
சாலை விபத்தில் உடல் நலம் குன்றிய தாய். சித்தி வீட்டில் வளரும் மாணவி. மாணவி செல்வி J ஹேமலதா அவர்கள் கௌரிவாக்கம் பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் காலேஜில் BSc (CS) பயில ₹10,000 காசோலையாக கலோரி பெயரில் கல்வி உதவி தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் இன்று வழங்கப்பட்டது.
வள்ளலார் வழித்தோன்றலின் ஆறாவது தலைமுறையின் திரு உமாபதி ஐயா அவர்கள் நேற்று நேரில் மாணவிக்கு காசோலை வழங்கினார்.
இதுவரை தீபம் அறக் கட்டளை 1108 மாணவர்களுக்கு மேற்படிப்பு பயில கல்வி உதவியாக ₹61,05,165/- வழங்கியுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
வசதி குறைந்த நிலையில் உள்ள மாணவி செல்வி J ஹேமலதா அவர்களுக்கு கல்வி உதவியாக நிதி வழங்கிய தீபத்தின் நிரந்தர நன்கொடையாளர்கள் (மாதாந்திர தொடர் நன்கொடையாளர்) தீபம் அறக்கட்டளை நன்றியை பதிவு செய்து மகிழ்கிறது.
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635
– This Body is to Serve Others
(சமுதாய பணியில் 25ஆம் ஆண்டில்…)