‘‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்” என்று பாடினார் வள்ளலார்.
அவரின் திருத்தொண்டினை அடிப்படையாகக் கொண்டு சென்னை வேளச்சேரியில் இயங்கி வருகிறது தீபம் அறக்கட்டளை.
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 16 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
Year | No of Students | Amounts |
2010-11 | 80 | ₹ 3,75,000 |
2011-12 | 97 | ₹ 5,67,365 |
2012-13 | 115 | ₹ 61,800 |
2013-14 | 85 | ₹ 5,11,680 |
2014-15 | 73 | ₹ 4,50,000 |
2015-16 | 87 | ₹ 3,54,920 |
2016-17 | 127 | ₹ 6,25,811 |
2017-18 | 112 | ₹ 6,44,172 |
2018-19 | 104 | ₹ 6,67,470 |
2019-20 | 115 | ₹ 5,72,767 |
2020-21 | 60 | ₹ 3,60,041 |
2021-22 | 53 | ₹ 3,57,939 |
2022-23 | 89 | ₹ 8,79,490 |
2023-24 | 72 | ₹ 4,53,950 |
2024-25 | 83 | ₹ 6,22,360 |
Total | 1352 | ₹ 80,60,965 |
இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு (degree diploma engineering doctorate) மொத்தம் ₹80,60,965/– ரூபாய் இலவச கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 16 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக் கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.
கடந்த வருட கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்வின் காணொளிப்பதிவு:
https://youtu.be/lmZt4MJuM5Y
இந்த வருடம் கல்வி உதவித்தொகைக்கு நன்கொடைகள் வரவேற்க்கப்படுகின்றன, கடந்த வருடம் மிகக் குறைவாகவே நன்கொடைகள் வந்தது. ஓர் ஏழை மாணவர் உயர்கல்வி பயில நிதி உதவி செய்து, அவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றுவோம்.


























https://photos.app.goo.gl/











For Donation thro Bank Transfer:
DEEPAM TRUST
Current A/C No.30265475129
State Bank of India
IIT Madras
IFS:SBIN0001055
Gpay – 9444073635
UPI ID – deepamtrust@sbi
UPI ID – 9444073635@okbizaxis
Please note that PAN is mandatory for claiming under Section 80G of the IT Act.











தயவுடன்…
என்றென்றும் சமுதாய சிறு பணியில்… 28 ஆண்டுகளாக…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி, சென்னை
9444073635
– This Body is to Serve Others