அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு

14. 02.2024 – அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி உணவு…

சமுதாய பணிகளை மென்மேலும் விரிவாக்கம் பொருட்டு, மேலும் ஒரு புதிய தர்ம சாலை – Adyar Cancer Hospital.

நீண்ட நாள் திட்டமான, அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் பல்வேறு மாநில நோயாளியின் அட்டெண்டெர்கள் உணவுக்காக அல்லலுறும் நிலையை கண்டு, தீபம் நிர்வாகம் நேரில் சென்று மருத்துவமனை நிர்வாகிகளிடம் உணவு வழங்குவது குறித்து ஆய்வு நடத்தியது. தீபம் அறக்கட்டளை தினசரி டாடா ஏஸ் வாகனம் மூலம் நேரில் சென்று 13.2.24 முதல் மதிய உணவு வழங்குகிறது. சிறு காணொளி இணைத்துள்ளோம்.

சுகாதாரமான உணவு தயாரித்தல், பேக் செய்தல், வாகனத்தில் நேரத்திற்கு கொண்டு செல்லுதல், அன்போடு உணவை வழங்குதல், போன்ற பணிகள் நமது நித்ய தீப தருமச்சாலையில் நாள்தோறும் பெருகியவண்ணம் உள்ளது. தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ அல்லது விடுமுறை நாட்களிலோ அன்னதான தொண்டு செய்து ஆன்மலாபம் பெற்று வாழ தீபம் அன்போடு அழைக்கிறது.

என்றென்றும்…
சமுதாய சிறுபணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
Gpay: 9444073635
– This Body is to Serve Others

Leave A Comment