*தீபம் தொண்டர்களுக்கு நன்றி!* *-மெய்யூர் கிராம சேவை* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணியாக கொரோனா ஊரடங்கால் கூலி வேலை இல்லாமல் பாதிக்கப்பட்ட, 100 மெய்யூர் கிராம ஏழ்மை நிலையிலுள்ள பழங்குடியின குடிசைகளில் வாழும் மக்களுக்கு 10 கிலோ முதல்தர அரிசியும் 22 வகையான மளிகைப் பொருட்களும், பழைய ஆடைகளும், சுவையான உணவும், குழந்தைகளுக்கு பிஸ்கட் இனிப்பும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒவ்வொரு குடிசைக்கும் நேரடியாகச் சென்று அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்கியது அற்புதமான சமுதாயப்பணி. மேலும் கிராம மக்களுக்கு சுவையான சூடான உணவு வழங்கியது மகிழ்ச்சி. ஏராளமான பழைய துணிமணிகளை பெண்களும் குழந்தைகளும் மகிழ்ச்சியுடன் கொண்டு சென்றது கண்கொள்ளா காட்சி. குழந்தைகளுக்கு இனிப்புகளும் பிஸ்கட் வழங்கியது பேரானந்தம். இயற்கையான, அடர்த்தியான, காப்பு காடுகளில் காலை உணவும் மதிய உணவும் தீபம் குடும்பத்தோடு எடுத்துக்கொண்டது மட்டிலா மகிழ்ச்சி. திரு வெங்கடேசன் அவர்கள் வாகனத்தில் பயணம் செய்தது அற்புத அனுபவம். 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 இந்த அற்புதமான சமுதாயப் பணியில் தீபம் அறக்கட்டளையின் சார்பாக நாள் முழுவதும் தொண்டு செய்த 21 தீபம் தொண்டர்களை தீபம் அறக்கட்டளை நன்றியோடு வாழ்த்தி மகிழ்கிறது. திரு காந்தி அவர்கள் திரு ஏழுமலை அவர்கள் திரு வெங்கடேசன் அவர்கள் திரு ஆனந்த் அவர்கள் திரு பாரதி அவர்கள் திரு கணபதி அவர்கள் மாஸ்டர் ரிஷி அவர்கள் திரு பிரம்மி ஈசன் அவர்கள் திரு பழனிச்சாமி அவர்கள் திரு கந்தசாமி அவர்கள் திரு ராஜசேகர் அவர்கள் தீபம் பாலா திரு குமரேசன் அவர்கள் திரு சுப்பையா அவர்கள் திருமதி தமிழ் காந்தி அவர்கள் திருமதி கவிதா கந்தசாமி அவர்கள் செல்வி நந்தினி அவர்கள் திருமதி புஷ்பா அவர்கள் திருமதி சுவாதி அவர்கள் திருமதி மின்னல் அம்மா அவர்கள் திருமதி நாகேஸ்வரி அவர்கள் திரு டிவி ரமேஷ் அவர்கள் 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 ஞாயிற்றுக்கிழமை விடியற் காலை 3 மணி முதல், காலை உணவும் மதிய உணவும் தயார் செய்த zதிரு பாரதி அவர்களையும் தூக்கத்தை தியாகம் செய்த தீபம் தொண்டர்களையும் வாழ்த்துகிறோம். மெய்யூர் கிராம சேவை மிக அற்புதமாக திட்டமிட்டு தலைமை பொறுப்பேற்று நடத்தி கொடுத்த அறக்கட்டளையின் அறங்காவலர் *திரு V பாரதி* அவர்களுக்கும், அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் *திரு D ஆனந்த்* அவர்களுக்கும் தீபம் அறக்கட்டளை நன்றியையும் பாராட்டுக்களையும் பதிவு செய்கிறது. 👏👏👏👏👏👏👏👏👏 சமுதாய பணியின் சிறு பதிவை காணொளியாக இணைத்துள்ளோம். கண்டு மகிழுங்கள். மெய்யூர் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட *ஒரு டன் அரிசி முழு பொறுப்பும் ஏற்று கொண்ட, அண்ணா நகர் திரு N கந்தசாமி அவர்களையும்*, மளிகைப் பொருட்களின் ஒரு பாகத்தை ஏற்றுக்கொண்ட திருமதி நாகேஸ்வரி ரங்கராஜ் அம்மையார் அவர்களையும், தீபம் அறக்கட்டளை நன்றி பாராட்டி மகிழ்கிறது. *எல்லா புகழும் தீபம் அறக்கட்டளையின் தொண்டர்களுக்கே.* 💐💐💐💐💐💐💐💐💐💐 வாழ்த்துக்களுடன் ... *தீபம் நிர்வாகம்*
20
Jun, 21