*மா மனிதரை வணங்குகிறோம்*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
*- திரு அருட்பா*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட்பெரும் ஜோதி ஆண்டவருடைய பேராற்றல் பெரும் கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் பல்வேறு கிராம நித்ய தீப தர்ம சாலைகளின் அன்னதான பணிகளும், அறப்பணிகளும், வாரி வழங்கும் வள்ளல்களாலும், மாதந்தோறும் தொடர் நன்கொடைகள் வழங்கும் அருளாளர்களின் அற்புத அருட்செயல்களாலும், தர்ம பணிகள் தடைபடாமல் அல்லும் பகலும் மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தர்மம் செய்பவர்களுடைய திருப்பாதங்களை, தெய்வீகப் பாதங்களாக  எண்ணி, வணங்கி மகிழ்கிறோம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
இதுகாறும் தீபம் அறக்கட்டளைக்கு மாதம்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் நன்கொடைகள் வழங்கி தினசரி ஆயிரக்கணக்கானோரின் மக்கள் பசி போக்கும் சமுதாய பணியில், ஆண்டவரே அதிசயிக்கும் வண்ணம், அற்புத நிகழ்வாக நடைபெறும், நடைபெற்று வரும் நிகழ்வை இதோ தீபம் பதிவு செய்து மகிழ்கிறது. 
👏👏👏👏👏👏👏👏👏👏👏
மாமனிதராக தன்னை காட்டிக் கொள்ளாமல் வாழும், எளிமையான, மிகவும் தாராளமான தர்ம குணம் கொண்ட, ஓர் அற்புத மனிதரை தீபம் அறக்கட்டளையின் நிரந்தர நன்கொடையாளரை,  தங்களுக்கு அறிமுகம் செய்வதில் தீபம் ஆனந்தம் அடைகிறது. பேரானந்தம் அடைகிறது. உயர்ந்த தர்ம குணம் கொண்ட மாமனிதர்கள் தன்னை காட்டிக் கொள்ளாமல் எளிமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பதிவு செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. இயற்கையின் படைப்பில் ஆணிவேர் தன்னை காட்டிக் கொள்வதே இல்லை. (If there is no root, no fruit).
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
செய்யாறு வட்டம் இருங்கல் கிராமத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது சென்னை முத்தமிழ் நகரில் வசிக்கக்கூடிய  *தயவு தீபம் திரு S  சதீஷ்குமார் ஐயா* அவர்கள் மாதந்தோறும் தீபம் அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு அவருடைய உழைப்பிலிருந்து, ஊதியத்திலிருந்து மாதம்தோறும் ரூபாய் 5000 பொற்காசுகள் நன்கொடையாக காசோலை வழங்கி வருகிறார். 

மேலும் சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் புதிதாக உருவாகி கொண்டிருக்கக்கூடிய நித்ய தீப தர்ம சாலை அன்னதான கட்டிட வளாக திருப்பணிக்கு தன்னுடைய *முழு மாத ஊதியமான ரூபாய் 44,000ஐ*  அப்படியே  கட்டிட திருப்பணிக்கு நன்கொடையாக வழங்கி, மனிதருள் மாணிக்கமாக, தன்னை காட்டிக் கொள்ளாமல் மிக எளிமையாக இல்லறத்தில் நல்லறம் கண்டு வாழ்கிறார், தயவு தீபம் திரு S சதீஷ் குமார் ஐயா அவர்கள்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
*திரு S சதீஷ் குமார்* அவர்களை அடியேன் (தீபம் நிறுவனர்) தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்த போது, வாழ்த்து சொன்ன போது, மிக எளிமையாக பொறுமையாக, எல்லாம் வல்ல இறையருளுக்கு நன்றி!  ஐயா🙏 இறையருளால் தீபம் அறக்கட்டளை என்ற ஓர் உண்மை தொண்டு நிறுவனத்தை அடியேனுக்கு காட்டிக்கொடுத்த இறைவனுக்கு நன்றி என்று மனம் நெகிழ்ந்து உணர்ந்து உருகினார் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாகிய திரு சதீஷ் குமார் அவர்கள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நல்ல மனம் வாழ்க!
என்னிடம் மாநில, மத்திய அவார்டு கொடுக்க கூடிய அதிகாரம் இல்லாததால், மனதார வாழ்த்துக்களையும் நன்றியையும் மட்டுமே பதிவு செய்து மகிழ்கிறேன். மாமனிதரின் செய்கையை, தர்மத்தை, பதிவு செய்து பாராட்டி மகிழ்கிறேன். 

எல்லாம் வல்ல இறையருள், அண்டத்தை ஆளக்கூடிய ஆண்டவர், *மிக உயர்ந்த அவார்டை* தர்ம பாதையில் பயணிப்பவர்களுக்கு, உண்மை தொண்டு செய்பவர்களுக்கு வழங்க தயாராக உள்ளார்.

*திரு S சதீஷ் குமார்* அவர்கள் வாழ்க!
அவருடைய அன்பு குடும்பம் வாழ்க!
அவருடைய சந்ததிகள் வாழ்க!
அவருடைய தொழில் வாழ்க!
அவருடைய தர்ம குணம் வாழ்க!

என்று சென்னை வேளச்சேரி தீபம் அறக் கட்டளை ஒரு மாத ஊதியத்தை அப்படியே சமுதாயப் பணிக்காக பல லட்சம் மக்கள் பசியாறிய / பசியார போகின்ற நித்திய தீப தர்மசாலை கட்டிட திருப்பணிக்கு வழங்கிய திரு S சதீஷ் குமார் அவர்களை தீபம் பாராட்டி வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரி கரை தெருவில் புதிதாக உருவாகிக் கொண்டிருக்கும் வள்ளலார் அன்ன தர்மசாலை கட்டிட திருப்பணி இதுவரை 60% நிறைவுபெற கருணைமாநிதியும் கட்டிட பொருட்களும் மனமுவந்து வழங்கிய 30 நல் உள்ளங்களை, நன்கொடையாளர்களை தீபம் அறக்கட்டளை நன்றி கூறி பாராட்டி வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.*
💐💐💐💐💐💐💐💐💐💐💐
வாழ்க தர்மம் ! வளர்க தர்மம் !

தர்மம் செய்வோம் ! 
தயவுடன் வாழ்வோம் !
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன்...
சன்மார்க்க சிறு பணியில்...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment