தயவுடையீர்,
மக்கள் பிணி போக்க “கிராம மூலிகை தோட்டம்”
திருவருள் பெருங்கருணையால், சென்னை வேளச்சேரியில்
சாலை (நித்ய தீப தருமசாலை) அமைத்து,
சபை (ஞானசபை) அமைத்து,
தினசரி 3 வேளையும் தொடர் ஜீவகாருண்யப் பணிகளை, அன்னதானப் பணிகளை, அறப்பணிகளை, தீபம் அறக்கட்டளை செய்துகொண்டிருப்பது தாங்கள் அறிந்ததே.
மேலும் திருவருட்பிரகாச வள்ளலார் போதித்த உபகார சாலைகளில் ஒன்றான மக்களின் பிணிப்போக்கும் வள்ளலார் வைத்தியசாலை விரைவில் அமைக்க திருவுள்ளம் திட்டமிட்டுள்ளது. வைத்ய சாலைக்கு தேவையான இயற்கை மூலிகை தோட்டம் அமைக்கும் பொருட்டு மூலிகை பண்ணை மற்றும் முதியோர் இல்லம் அமைய திருவுள்ளம் ஆணையிட்டுள்ளது.
வாடியபயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்னும் வரியுடன் நிற்காமல், நீடுறு பிணியால் வருந்துகின்றோர் என் நேருறக் கண்டு உளம் துடித்தேன் என்று எழுதிய கருணை வடிவான வள்ளலார், எந்த ஆதாரமும் இல்லாத, ஏழைகளின் பசி தீர்ப்பதுடன் வைத்திய சாலை அமைத்து, அவர்களின் பிணி போக்கவும் அறிவுறுத்தியதால், அவர் வழிப்பணியில், (தருமச்சாலை, தவச்சாலை, பாடசாலை, வைத்தியசாலை) என தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை மரம் செடிகொடிகளை, மூலிகைகளை சொந்தமாக கிராமத்தில் வளர்க்க, சென்னையில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிற்குள் 5 ஏக்கர் வரையிலான நிலத்தை, தானமாகப் பெற்று அல்லது குறைந்த விலையில் வாங்கி, அதில் குறிப்பாக மரம் செடி கொடிகள் மட்டுமல்லாது, வள்ளலார் விரும்பி எழுதிய, மூலிகை அட்டவணை மற்றும் உடல் பிணி போக்கும், தடுக்கும் முக்கியமான ஞான மூலிகைகளாம் தூதுவளை, வல்லாரை, கரிசலாங்கண்ணி, முசுமுசுக்கை, போன்றவற்றைப் பயிரிட்டு, பலருக்கும் பயன் அளிக்கும் திட்டம் ஒன்றை தீவிரமாக செயல்படுத்தும் முனைப்பில் உள்ளது.
தினசரி காலையில் நித்ய தீப தருமசாலையில் வழங்கப்படும் கஞ்சியில் தற்போது வாரத்தில் / மாதத்தில் அனைத்து நாட்களிலிலும், தினசரி மூலிகை கலந்த கஞ்சியாக வழங்கப்படுவதால், அதைப் பருகும் மக்களுக்கு இனி பிணி வராமலும், பிணி உள்ளவர்கள் அதைப் போக்கிக் கொள்ளவும், வழிவகுக்கும்.
நித்ய தீப தருமச்சாலையை நாடிவருபவர்களின் பிணி போக்க, ஞான மூலிகைகளை, அதற்காக விரைவில் துவங்கப்பட உள்ள வைத்திய சாலையில் இனி இலவசமாக வழங்கப்படும்.
சென்னையிலிருந்து வடலூர் செல்லும் நெடுஞ்சாலையில், மதுராந்தகத்தை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவில்
வயல் வயல் சார்ந்த இடம்,
ஆறு ஆறு சார்ந்த இடம்,
(குளம் அல்லது ஏரியை ஒட்டிய நிலம்)
மலை மலை சார்ந்த இடம், இயற்கை எழில் சூழ்ந்த சூழலில்,
3 முதல் 5 ஏக்கர் வில்லங்கமில்லா விவசாயம் செய்யும் விளை நிலம் விலைக்குப் பெற, சகாய விலையில், அல்லது தானமாக பெற தீபம் அறக்கட்டளை மனிதநேயப் பணிகளுக்காக தங்களிடம் விண்ணப்பிக்கிறது.
இந்த புண்ணிய சமுதாய மக்கள் நலப்பணியில், “மூலிகை தோட்டம் அமைய சிறந்த இடம் விலைக்கு உள்ளது” என்ற செய்தியை தீபம் அறக்கட்டளைக்கு தெரியப்படுத்தவும்.
தயவுடன் …
என்றென்றும் சன்மார்க்க ஆன்ம நேயப் பணியில்…
தீபம் அறக்கட்டளை
வேளச்சேரி சென்னை
9444073635