தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • தீபம் அறக்கட்டளையின் சமுதாயப்பணிகள்
கடவுளுக்கு வெள்ளி கவசம் கொடுத்தா" குடுக்கிறவங்களுக்கு சந்தோஷம்.*

*"இல்லாதவங்களுக்கு அள்ளி கொடுத்தா" அந்த கடவுளுக்கே சந்தோஷம்.*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
கோவிலுக்குச் செல்வது *- பக்தி மார்க்கம்*
உயிர் உபகாரம் செய்வது *- ஞான மார்க்கம்*
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*தயவுடையீர்,*
வணக்கம் வந்தனம்!

"தர்மம் பண்ணினால்" நல்லது.
"நாலு பேருக்கு நல்லது பண்ணா" நல்லது.
"பசிச்சவங்களுக்கு சோறு போட்டா" நல்லது.
"ஒரு ஏழை மாணவனை படிக்க வைப்பது" நல்லது.
"இல்லாதவங்களுக்கு கொடுக்கிறது" நல்லது.
💥💥💥💥💥💥💥💥💥💥
இந்த வாக்கியங்கள் எல்லாம் தர்மத்தை கடைபிடிப்பவர்கள், சமுதாய அக்கறை உள்ளவர்கள், நம்மை வளர்த்த சமுதாயத்திற்கு நாம் ஏதேனும் திருப்பி செய்ய வேண்டும் என்ற தெய்வீக எண்ணங்களாலும், தெய்வீக செயல்களாலும் செய்பவை.
🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கடந்த 25 ஆண்டுகளாக... 1997ல் சிறு சேவையாக ஆரம்பித்து, இன்று வெள்ளிவிழா ஆண்டில் பல்வேறு சமுதாய பணிகளை, உயிர் உபகார பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கொரோனா காலத்தில் மட்டும், கடந்த 18 மாதங்களில்
நித்ய தீப தருமச்சாலையில் தினசரி 100 கிலோ அரிசி வீதம் இதுவரை 18 மாதங்களில் 50 டன் அரிசியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்களாக ...தர்ம சாலை தேடி வருபவர்களுக்கும், ரோடு ஓரங்களில் ஆதரவற்று வாழ்பவர்களுக்கும், இறை அருளாலும், உயிர் உபகாரம் செய்யும் நல்ல உள்ளங்களால் தொடர்ந்து நடைபெற்றது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடைபெறும்.
💫💫💫💫💫💫💫💫💫💫
கொரோனா காலத்தில் பார்வையற்ற 110 குடும்பங்களுக்கு, முதல் கட்டமாக குடும்பத்திற்கு ₹1000 வீதம், இரண்டாம் கட்டமாக குடும்பத்திற்கு ₹2000 வீதம் தீபம் அறக் கட்டளை வங்கி பரிமாற்றம் மூலம் ₹3 லட்சம் நிவாரண உதவி வழங்கியது.

கொரோனாவால், 
ஊரே ஸ்தம்பித்தது.
நாடே ஸ்தம்பித்தது 
உலகமே ஸ்தம்பித்தது.
ஆனால் பல்வேறு சமூக அமைப்புகளும், அரசு, அரசு சார்ந்த அமைப்புகளும், சில தனியார் அமைப்புகளும், தனிப்பட்ட நபர்களும், குடும்பங்களாக, சமுதாயத்திற்கு பல்வேறு உதவிகளை செய்தனர். சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை வாழ்வாதாரம் பாதித்த மக்களுக்கு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று (கல் கொட்டை வெண்பேடு, மெய்யூர், இருளர் குப்பம், குருபுரம், மதுராந்தகத்தில் சுற்றியுள்ள ஐந்து கிராமங்கள்) நிவாரண பொருட்களாக, அரிசியும், மளிகைப் பொருட்களும் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 20 டன்களுக்கும் மேலாக நேரில் சென்று வழங்கியது.

கொரோனா காலகட்டத்தில் நவம்பர் 2020ல் ஆரம்பிக்கப்பட்ட புதிய நித்திய தருமசாலை கட்டிட வளாகத் திருப்பணிகள் தொய்வின்றி, பல்வேறு சமுதாய பணிகள் தடைபடாமல் நடைபெற்றது. சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் அருகில் புத்தேரிக்கரை தெருவில் புதிய தர்மசாலை கட்டிடம் அமைய, 11 மாதங்கள், பலன் கருதாது கடுமையாக உழைத்த, நந்தினி பில்டர்ஸ் ஸ்தாபகர் *திரு N குமரகுருபரன் ஐயா* அவர்களுக்கும், தருமச்சாலை கட்டிடத்திற்கு 40% கட்டிடப் பொருட்களாகவும், நிதியாகவும், வாரி வழங்கிய அண்ணாநகர் *திரு N கந்தசாமி ஐயா* அவர்களுக்கும், தொடர்ந்து இடைவிடாது கட்டிட பணிகளை மேற்பார்வை செய்த *திரு V பாரதி* அவர்களுக்கும், மேலும் எண்ணங்களாலும், சொல்லாலும், செயலாலும், நிதியாலும், உழைப்பாலும் ஆதரவு வழங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு அன்பர்களுக்கு, தீபம் அறக் கட்டளை நன்றியைப் பதிவு செய்கிறது. பாராட்டுகிறது. வாழ்த்துகிறது. வணங்குகிறது.
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓
புதிய தர்மசாலை கட்டிட திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், தற்போது தர்மசாலைக்கு  பசியோடு வரக்கூடிய மக்களுக்கு புதிய தருமச்சாலையில்  சேர் டேபிள் அமரவைத்து தினசரி மூன்று வேளையும், வயிறார உணவு வழங்கி வருவது கண்கொள்ளா தெய்வீக காட்சி. 

இதுவரை தீபம் அறக்கட்டளை வறுமை நிலையில் உள்ள 1106 மாணவ மாணவிகள் மேற்படிப்பு பயில (டிகிரி, டிப்ளமோ, என்ஜினீயரிங், மருத்துவம்) கல்வி உதவியாக ₹61 லட்சம் நிதி வழங்கி இருக்கிறது.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
தீபம் அறக்கட்டளையின்  அனைத்து அறப்பணி பணிகளுக்கும், அன்னதான பணிகளுக்கும், தருமச்சாலை கட்டிட திருப்பணிகளுக்கும், தொடர்ந்து மாதந்தோறும் தொடர் நிதி வழங்கி, கட்டிட பொருட்கள் வழங்கி, நல்லாதரவு அளிக்கும், கண்ணினும் மேலான நன்கொடையாளர்களின் திருப்பாதங்களை தெய்வீக பாதங்களாக வணங்கி மகிழ்கிறோம்.
🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏
பணம், புகழ், பதவி, பெருமை, விளம்பரம், போன்றவற்றை தேடாத, நாடாத,  அதே வேளையில் உண்மை, நேர்மை, அன்பு, கருணை, தயவு, இரக்கம் போன்ற தெய்வீக  குணங்களால், தீபம் அறக் கட்டளையின் அனைத்து அறப்பணிகளுக்கும்,  முழு நம்பிக்கையோடு நன்கொடைகளை, பொருளாகவும், நிதியாகவும், வழங்கிக்கொண்டிருக்கும் தீபம் அறக்கட்டளையின் அனைத்து நன்கொடையாளர்களுக்கு *"எல்லா புகழும்"* சமர்ப்பணம்.
🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀🍀
தீபம் அறக் கட்டளை ஓர் அரசு பதிவுபெற்ற, 80G வருமான வரி விலக்கு பெற்ற, சமுதாய அறத் தொண்டு நிறுவனம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள்  *"தினசரி மக்கள் பசி ஆறுவதற்கும்"* பிறந்த நாள், திருமண நாள், சிறப்பு நாள் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும், அல்லது காரணமே இல்லாமல், தர்மமே மூச்சாகக் கொண்டு, தொடர் தர்மம் செய்யும் கருணாமூர்த்திகளை, தர்மவான்களை, 
கர்ண பிரபுக்களை, 
மனித தெய்வங்களை,
வாழும் வள்ளல்களை 
வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.
வாழ்த்துகிறோம் வணங்குகிறோம்.
வாழ்த்துகிறோம். வணங்குகிறோம்.
🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏
விருப்பத்தின் பேரில் மட்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் *"நன்கொடைகள் வழங்க"* அனுப்பப்படும். பதிவு நிறுவனம் என்பதால் ரொக்க நன்கொடைகளை முழுமையாக தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
கேட்டுப் பெற்றால் அது  *"நன்கொடை."*
கேளாமல் பெற்றால் அது *"தர்மம்."*
💐💐💐💐💐💐💐💐💐💐
*வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
தயவுடன்...
என்றென்றும் சன்மார்க்க திருப்பணியில்...
*தீபம் அறக் கட்டளை*
வேளச்சேரி சென்னை.
9444073635

Leave A Comment