தீபத்தின் நன்கொடையாளர் களின் கமல திருப்பாதங்களுக்கு வந்தனம்.

  • Home
  • NDD FUNCTIONS
  • தீபத்தின் நன்கொடையாளர் களின் கமல திருப்பாதங்களுக்கு வந்தனம்.

தீபத்தின் நன்கொடையாளர் களின் கமல திருப்பாதங்களுக்கு வந்தனம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பேரருளால், பெருங்கருணையினால், தர்ம சாலை திறப்பு விழா மற்றும் ஞானசபை குடமுழுக்கு விழா சன்மார்க்க ஆன்றோர் பெருமக்களால், ஏப்ரல் 10 முதல் 15 ஆம் தேதி வரை தொடர்ந்து ஆறு நாட்கள் சீரும் சிறப்புமாக, விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து நான்கு நாட்கள் முற்றோதல் விழாவும், தொடர்ந்து இரண்டு நாட்கள் சொற்பொழிவு, ஞான சபை குடமுழுக்கு விழா மற்றும் வள்ளலார் மலர் அலங்கார வீதி உலா சன்மார்க்க சான்றோர் பெருமக்கள் புடைசூழ, திருவருட்பிரகாச வள்ளலார் தோன்றும் துணையாகவும், தோன்றாத் துணையாகவும், எழுந்தருளி அற்புதங்கள் செய்தார்… செய்துகொண்டிருக்கிறார்… செய்விப்பார்…

தீபம் அறக்கட்டளை திருவிழாவில் நேரில் கலந்துகொண்ட ஆன்மநேய அன்பர்களுக்கும், பல்வேறு காரணங்களால் நேரில் வர இயலாதவர்களுக்கும், விழா சிறப்படைய வாழ்த்துக்களை பதிவு செய்தவர்களுக்கும், நிறை குறைகளை விமர்சனம் செய்தவர்களுக்கும், தீபம் நெஞ்சார்ந்த நன்றியை பதிவு செய்து மகிழ்கிறது.
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
தீபம் அறக்கட்டளை வரலாற்றில், இந்த அற்புத ஆறு நாட்கள் வைபவத்தில், ஏராளமான விழா பணிகளை,
விழாவிற்கு முன்பும்,
விழா நாட்களிலும்,
விழாவிற்கு பிறகும் சிரமேற்கொண்டு, பொறுப்பேற்று, பக்தியுடன், இரவு பகலாக கண் துஞ்சாது உண்மை உழைப்பு நல்கிய தீபத்தின் ஆடுகின்ற சேவடிகளின் திருப்பாத கமலங்களில் தீபம் நிறுவனரின் ஒரு கோடி வந்தனம் வந்தனம் வந்தனம்.
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
மேலும் தர்மசாலை மற்றும் ஞான சபை குடமுழுக்கு விழா சிறப்படைய, நிறைவடைய, பொருள் உதவியும்,
நிதி உதவியும், விழா நடைபெற பல்வேறு உபயங்களை ஏற்று, தர்மசாலை ஞான சபையை அலங்கரித்த தீபம் அறக்கட்டளை நன்கொடையாளர்களை மனம் மொழி மெய்யால் வணங்கி மகிழ்கிறோம். வாழ்த்துகிறோம்.
💥💥💥💥💥💥💥💥💥
தீபம் விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாத
தீபத்தின் மாதாந்திர தொடர் நன்கொடையாளர்கள்,
தீபத்தின் நன்கொடையாளர்கள், சன்மார்க்க சம்பந்திகள்,
தீபத்தின் நலம் விரும்பிகள்,
தீபத்தில் பயின்ற மாணவ மாணவிகள், தாங்கள் விரும்பும் நாளில், சவுகரியமான நேரத்தில், குடும்பத்துடன் சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில் அருகில் அமைந்துள்ள ஞான சபைக்கு நேரில் விஜயம் செய்து, திருவருட்பிரகாச வள்ளலாரை தரிசனம் செய்து மகிழுமாறு தீபம் அன்போடு அழைத்து மகிழ்கிறது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நெஞ்சார்ந்த நன்றிகளுடன்…
தீபம் பாலா
நிறுவனர்,
தீபம் அறக்கட்டளை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
Address of Dharumasalai:
Nithya Deepa Dharmachalai
No.7/8, Putheri Karai St, (தருமச்சாலை வீதி), Near Dhandeeswarar Temple,
Velachery, Chennai 42
Tamil Nadu 600042

04422442515 / 094440 73635

https://goo.gl/maps/D7fddZw3TMsPVMEb7

Leave A Comment