*கொரோனா ஊரடங்கு காலத்தில் தீபம் அறக்கட்டளையின் சமுதாய அறப் பணிகள்*

  • Home
  • SOCIAL ACTIVISTS
  • *கொரோனா ஊரடங்கு காலத்தில் தீபம் அறக்கட்டளையின் சமுதாய அறப் பணிகள்*
*கொரோனா ஊரடங்கு காலத்தில் தீபம் அறக்கட்டளையின் சமுதாய அறப் பணிகள்*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி 
அருட்பெருஞ்ஜோதி 
தனிப்பெருங்கருணை 
அருட்பெருஞ்ஜோதி
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
*தீபம் அறக்கட்டளையின் தொடர் நன்கொடையாளர்களின் பேராதரவினால், இறையருள் பெறும் கருணையினால், எவ்வித தடையின்றி தினசரி நித்ய தீப தருமச்சாலையில் மற்றும் பல்வேறு கிராம சாலைகள் மூலம் இரவிலும் பகலிலும் தினசரி 2000 ஆயிரம் மக்களின் பசி போக்க, அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கிறது. உணவு வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பசியோடு நீட்டும் கைகள் எல்லாம் இறைவனின் கைகள்.*

தற்போது கொரோனா ஊரடங்கை முன்னிட்டு,  அன்னம் அளித்தல், சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மசாலையில் இரு மடங்காக விரிவாக்கம் ஆகியுள்ளது.
💐💐💐💐💐💐💐💐💐💐
சென்ற வருடம் 2020ல் கொரோனா ஊரடங்கு காலத்தில், முதல் அலையில், ஏழ்மை நிலையில் வாடிய மக்களுக்கு தீபம் அறக்கட்டளை நிவாரண நிதியும், நிவாரண பொருட்களும் வழங்கியது.  
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*சென்ற ஆண்டு நிவாரண உதவி:*
(Last Year Projects)

1) 110 பார்வையற்ற குடும்பங்களுக்கு தலா 1,000 வீதம் வங்கி பரிமாற்றமாக 5.6.20 அன்று வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

2) ரோட்டோரம் ஆதரவற்று வாழக்கூடிய 100 மக்களுக்கு புத்தாடைகள் 24.5.20 அன்று சிறப்பு உணவுடன் வழங்கப்பட்டது.

3) திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் காப்பு காடுகளில் வாழும் 100 பழங்குடியின குடும்பங்களுக்கு 10 கிலோ முதல் தர அரிசி மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்கள் அவர்களுக்கு நேரடியாக 18.7.20 அன்று வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது.

4) மதுராந்தகம் அருகில் ஐந்து கிராமங்களில் வாழக்கூடிய ஏழ்மை நிலையில் உள்ள 100 குடும்பங்களுக்கு 10 கிலோ தரமான அரிசி மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்கள் 1.8.20 அன்று நேரடியாக வழங்கப்பட்டது.

5) கல் குட்டை பகுதியில் குடிசையில் வாழும் 100 குடும்பங்களுக்கு 10 கிலோ முதல் தர அரிசி மற்றும் 12 வகையான மளிகைப் பொருட்கள் 25.7.20 அன்று நேரடியாக வழங்கப்பட்டது.

மேற்கண்ட சமுதாயப் பணியில் நிவாரண உதவி காட்சிகளை தங்களின் தெய்வீக பார்வைக்கு இணைத்துள்ளோம். கண்டு மகிழுங்கள். கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

*தீபம் அறக்கட்டளையின் நிவாரணப் பணிகள் -  2020:*

ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி மற்றும் 12 வகையான மளிகை பொருட்கள்:

*மெய்யூர் கிராமம்* - https://deepamtrustvelachery.blogspot.com

*கல்குட்டை* - https://deepamtrustvelachery.blogspot.com

மதுராந்தகம் - https://deepamtrustvelachery.blogspot.com
*110 பார்வையற்ற குடும்பங்களுக்கு நிதி உதவி:*

https://deepamtrustvelachery.blogspot.com

https://deepamtrustvelachery.blogspot.com

சென்ற வருடம் நிவாரண உதவியை அருள் நிதியாக, நிவாரண பொருட்களாக, தொண்டாக வழங்கிய,
மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 *எல்லா புகழும் தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கே !!!*

அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கு 
கடவுள் நிதி கொடுக்கவில்லை. 
கடவுளை நாங்கள் பார்த்ததுமில்லை. 
தற்போது கடவுள் வாழும் கோவில்களும் மூடப்பட்டிருக்கின்றன.
ஆனால்  மனித வடிவில்  நிறைய தெய்வங்களை பார்த்திருக்கிறோம். 
தற்போது எண்ணிலடங்கா மனித தெய்வங்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். 
*இனி மனித தெய்வங்களை பார்க்கப்போகிறோம்.*

தர்மத்தை உணர்ந்த, தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், மனித வடிவில், தொடர்ந்து 24 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளையின் அறப்பணிகளுக்கும், அன்னதான பணிகளுக்கும், தர்மசாலை கட்டிட திருப்பணிகளுக்கும், நன்கொடைகள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வுலகில் தர்மம் இருக்கும் வரையில், பசித்தவர்களின் பசி போக்க, தர்ம சாலைகளில் அடுப்புகள் எரிந்து கொண்டே இருக்கும். மக்களின் பசி போக்க தர்ம சாலைகளில் அடுப்புகள் எரியும் வரை, இவ்வுலகத்தில் தர்மம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். கலியுகம் *சத்ய யுகமாக மாறும்.*

தினசரி வாழ்வாதார உதவி கேட்டு, உணவு கேட்டு, பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் தொடர்ந்து தீபம் அறக்கட்டளையை அழைத்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வாரம்,
1) ரோட்டோரம் ஆதரவற்று வாழ்பவர்களுக்கு புத்தாடையும், 
2) பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியும்,
3) சென்னை கல் குட்டை பகுதியில் வாழக்கூடிய ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரண பொருட்களும், வழங்க இருக்கிறோம்.

விரைவில் விரைவான தகவல்... நாளை அனுப்புகிறோம்.
👸👸👸👸👸👸👸👸👸👸👸👸
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம் !!!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
தயவுடன்... 
என்றென்றும் சமுதாய சன்மார்க்க சிறுபணியில் ...
*தீபம் அறக்கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635

Leave A Comment