ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு 13ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை:
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, 80G வருமான விலக்குடன், கடந்த 25 ஆண்டுகளாக, தினசரி 2000 மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும், 100 ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவி தொகை வழங்கி வருகிறது.
கல்வி உதவி பெற விண்ணப்பம்:
https://deepamtrust.org/educational-help-2/
இதுவரை கடந்த 12 ஆண்டுகளில் 1108 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹61,05,165/- ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 12 ஆண்டுகளில் ₹62 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.
கடந்த வருடங்களில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை காணொளிக் காட்சியை காண கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும்:
10 ஆம் ஆண்டு:
https://youtu.be/CPXYK6i4eZ0
9 ஆம் ஆண்டு:
https://youtu.be/ypdlC1vnR7k
8 ஆம் ஆண்டு:
https://youtu.be/9yTgPCPZosE
மேலும் வரும் 2022-23 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல், பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ மாணவிகளிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் ஆன்லைனில் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.
தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாணவ மாணவிக்கு உதவி கரம் நீட்டினால், அனைத்து ஏழை மாணவ மாணவிகளுக்கும் கல்வி உதவி கிடைக்கும். படித்து சமுதாயம் நலம் பெற பயனடைவார்கள்.
ஏழைகளுக்கு உதவி செய்யும் நன்கொடையாளர்களுக்கு “நிறை இன்பமும், இறை நிகர் வாழ்வும் இப்பிறப்பிலேயே” கிட்டும்.
தீபம் அறக்கட்டளையின் நேர்காணலில் தகுதி பெற்ற மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகையை, கல்லூரியின் பெயரில் காசோலையாக அல்லது வங்கி பரிமாற்றமாக மட்டுமே வழங்கப்படும் என்பதை நன்கொடையாளர்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
தருமத்தை கற்போம்! கல்வியை கற்பிப்போம்!
தாங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டம் 80(G) பிரிவின்படி வருமான வரிவிலக்கு உண்டு.
ரொக்க நன்கொடைகளை தவிர்க்கவும்:
Donations by Cheque / Draft:
You can also send a Cheque/Demand Drafts in the favour of ‘DEEPAM TRUST’ with your Name, Contact number, full address with pin code & Email (if available) to the office address mentioned below.
Deepam Trust, No.30, Throwpathi Amman Kovil Street, Velachery, Chennai – 600 042
Donation by Bank Transfer:
Account Name: Deepam Trust
Account No : 30265475129
Bank :State Bank of India
Branch : IIT Madras, Chennai – 600 036
IFSC Code : SBIN0001055
வங்கிப் பரிமாற்றம் செய்தபின், நன்கொடையாளர்கள், தங்கள் விவரங்களை 9444073635 என்ற எண்ணிற்கு sms அல்லது வாட்ஸ்அப்பில் தவறாமல் தகவல் அனுப்ப வேண்டுகிறோம்.
தர்மம் செய்வோம் !!!
தயவுடன் வாழ்வோம்!!!
நிறுவனர்
தீபம் அறக்கட்டளை
சென்னை வேளச்சேரி
-இது ஓர் அரசு பதிவு பெற்ற அற தொண்டு நிறுவனம்
(சமுதாயப் பணியில் 25 ஆண்டுகளாக…)
மேலும் தீபம் அறக்கட்டளையின் மற்ற சமுதாயப்பணிகளை அறிய விரும்புவோர், கீழ்க்கண்ட லிங்க் ஐ பயன்படுத்தவும் :
http://deepamtrust.org/social-activities/