*ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அரிசி மற்றும் மருத்துவ உதவி* சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. இதோ ஆடி வெள்ளி திரு நாளில் (6.8.21) தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மருத்துவ உதவி பெற்று குடும்பங்கள். 1) பெரம்பூர் திரு பாலச்சந்திரன், 2) அயனாவரம் திருச்செல்வம், 3) ஊரப்பாக்கம் திரு பாலாஜி, 4) அனகாபுத்தூர் திரு கார்த்திக், 5) திருமதி டெல்லி பாய் 6) பள்ளிகரணை விஸ்வநாதன் 7) அனகாபுத்தூர் ஆனந்தன் 8) பம்மல் பாஸ்கர் குடும்பங்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா 25 கிலோ முதல் தர அரிசி சிப்பம் (200 kgs) மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது.
வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி. தீபம் நன்கொடையாளர்களின் நன்கொடைகளை பொருத்து மேலும் பல்வேறு பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்க இருக்கிறோம். எவ்வித ஆதாரமும் இல்லாத பசித்த ஏழைகளின் பசிக்குறிப்பறிந்து, அவர்களின் பசிப்பிணியைப் போக்குவதே *தர்மம்.* "வள்ளலார் உபகாரச்சாலையின் ஜீவகாருண்யப் பணியானது" பசி நேரிட்டபோது அந்தப் பசியை போக்கிக்கொள்ள முடியாத ஏழைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகள் உள்ளிட்டோருக்கு *பேதமில்லாமல் அன்னமிடுதல்,* ஆகாரம் கொடுத்தல், பசியைப் போக்குதல் - நடைபெறும் இடம் *தருமச்சாலை* ஆகும். வறுமை கொடியது ! இளமையில் வறுமை அதனினும் கொடியது !! கலியுகத்தில் பசிப்பிணி மிக மிகக் கொடியது. *பசி கொடியது* என்பதை உணர்ந்து, தங்களின் உண்மையான உழைப்பிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு கிராம தர்ம சாலைகள் மூலம் நடைபெறும் தினசரி மக்களின் பசி போக்கும் தர்மசாலை பணிகளுக்கு தாங்கள் தீபம் அறக்கட்டளைக்கு அள்ளிக் கொடுக்கும் மாதாந்திர தொடர் கருணைமாநிதிக்கு வந்தனம் வந்தனம் வந்தனம்! 🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️ *பசித்தவர்களுக்கு அன்னம் அளித்தல் - தெய்வீக குணம்* தங்களுக்குள்ளே உள்ள இறையை நிறைவாக வணங்கி மகிழ்கிறோம்! தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும், தங்களுடைய சந்ததிகளும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நலமோடு வளமோடு வாழ்க என்று தீபம் பிரார்த்தனை செய்கிறது!!! *தீபம் அறக்கட்டளை* (Since 1997...) 9444073635 இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு, அளிக்கப்பட்ட அறத்தொண்டு நிறுவனம்.
07
Aug, 21