அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு

  • Home
  • Helps to Blinds
  • அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு
*அள்ளி கொடுப்பவர் நெஞ்சம் ஆனந்தப் பூந்தோப்பு.*
💥💥💥💥💥💥💥💥💥💥
*அருட்பெருஞ்ஜோதி* 
*அருட்பெருஞ்ஜோதி* 
*தனிப்பெருங்கருணை* 
*அருட்பெருஞ்ஜோதி*
🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடைய பேரருள் பெருங்கருணையினால், சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்திய தருமச்சாலையில் *தினசரி மூன்று வேளையும்* மக்களின் பசி போக்கும் சமுதாய பணி நடைபெறுகிறது.
🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚🍚
நித்திய தீப தருமச் சாலையில் நேற்று (16.12.21) மாலை *150 பார்வையற்ற மாற்று திறனாளி  குடும்பங்களுக்கு,* அரிசியும் சிப்பங்களும், 12 வகையான மளிகைப் பொருட்களும் வழங் கப்பட்டது. 

வந்திருந்த அனைவருக்கும் நித்ய தீப தருமசாலையில் மாலை உணவாக சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கிச்சடி, போண்டா, சட்னி, சாம்பாருடன் அன்பான அருள் உணவு வழங்கப்பட்டது.

பழைய மற்றும் புதிய தருமசாலையில் நிரம்பிய பயனாளிகளின் கூட்டம் கண் கொள்ளா ரம்ய காட்சி.

அரிசி உபயம் மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த நன்கொடையாளர்களை, மனித தெய்வங்களை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.

இரவு பகலாக ஓயாது தருமசாலையில் தொண்டு செய்யும் திருத்தொண்டர்களுக்கு திருப்பாத வந்தனம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
*பிறருக்காக வாழ்பவன் மாமனிதன்.*

*ஊருக்காக உழைப்பவன் மகான்.*

*தொடர் தர்மம், தொடர் தொண்டு செய்பவன் கடவுள்.*
🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
பட்டினியில்லா... நோயில்லா... குற்றமில்லா ...வளமான பாரதம் படைப்போம்.

வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தயவுடன் ...
*தீபம் அறக் கட்டளை*
வேளச்சேரி சென்னை
9444073635
(தினசரி 12 கிராம தர்மசாலைகள் மூலம் 2000 அன்பர்களின் பசி போக்கும் ஓர் அறத்தொண்டு நிறுவனம்)
- இது ஓர் அரசு பதிவு பெற்ற 80G வருமான வரிவிலக்கு அளிக்கப்பட்ட தரும ஸ்தாபனம்.

Leave A Comment