எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் வள்ளலாரின் ஜீவகாருண்ய நெறியே தீபம் அறக்கட்டளையின் பணிகளின் அடிப்படை. எங்கள் சேவைகளின் சுருக்கம் கீழே; ஒவ்வொரு பக்கத்திலும் கூடுதல் விவரங்களும் புகைப்படங்களும் உள்ளன.
உணவு
- அன்னதானம்: 11 நித்ய தீப தருமச்சாலைகள் மூலம் தினமும் இலவச உணவு.
- அடையாறு புற்றுநோய் மருத்துவமனை: நோயாளிகளுக்கும் உடனிருப்போருக்கும் தினமும் இரு வேளை உணவு.
- நடமாடும் அன்னதானம்: சாலையோரம் வாழும் மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள்.
- மெய்யூர்: மெய்யூர் கிராமக் குழந்தைகளுக்கும் குடும்பங்களுக்கும் உணவு.
- அரிசி & மளிகைப் பொருட்கள்: தேவையுள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர மளிகைப் பொருட்கள்.
கல்வி, மருத்துவம்
- கல்வி உதவி: ஏழை மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை.
- மருத்துவ உதவி: ஏழை டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மாதாந்திர உதவி, இலவச மருத்துவ முகாம்கள்.
- பார்வையற்றோருக்கு உதவி: பார்வையற்ற, மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு வாழ்வாதார, மருத்துவ உதவி.
நிவாரணம், பிற பணிகள்
- இயற்கைப் பேரிடர் நிவாரணம்: புயல், வெள்ளத்திற்குப் பின் நிவாரணம்.
- பிற பணிகள்: கோடையில் நீர் மோர், குளிர்காலத்தில் போர்வைகள் மற்றும் பல.
இச்சேவைகளுக்கு உதவ, நன்கொடை அளிக்கும் முறையைப் பார்க்கவும்.
