டயாலிசிஸ் மருத்துவ உதவி
- 8சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் உதவி
- ₹5,000ஒவ்வொருவருக்கும் டயாலிசிஸ் உதவி
- ₹40,000மொத்த டயாலிசிஸ் உதவி, காசோலையாக
இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக வழங்கப்படுகிறது.
மாதாந்திர இலவச இயற்கை சித்த மருத்துவ முகாம் – இயற்கை வைத்தியம்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
| நாள் | மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை |
| நேரம் | காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை |
கால்வலி, இடுப்புவலி, குடல் ஏற்ற வலி, தோள்பட்டை வலி, கழுத்துப் பிடிப்பு வலி, நாட்பட்ட தலைவலி, சர்க்கரை வியாதி போன்ற நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் நீவி குணமாக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
படங்களும் காணொளிகளும்

