65 பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி - 01.04.2022
மாற்றுத்திறனாளிகளை வணங்குகிறோம்
- 65குடும்பங்களுக்கு 01.04.2022 அன்று அரிசி, மளிகை
- 10 கிலோஒவ்வொரு குடும்பத்திற்கும் தரமான அரிசி
- 35மேலும் குடும்பங்களுக்கு, நன்கொடைகளை பொறுத்து
- 2,000மக்களுக்கு தினசரி பசி போக்கும் தருமச்சாலைப் பணிகள்
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த பத்து வருடங்களாக மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன.
01.04.2022 அன்று வெள்ளித் திருநாளில் தருமச்சாலையில் பிரார்த்தனையுடன் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி பெற்ற பார்வையற்ற குடும்பங்கள் - 65. ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 கிலோ தரமான அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் வழங்கப்பட்டது. அனைவருக்கும் தருமச்சாலையில் வயிறார உணவு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களுக்கு வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி. தீபம் நன்கொடையாளர்களின் நன்கொடைகளை பொறுத்து, மேலும் 35 பல்வேறு பார்வையற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி வழங்க இருக்கிறோம்.
எவ்வித ஆதாரமும் இல்லாத பசித்த ஏழைகளின் பசிக்குறிப்பறிந்து, அவர்களின் பசிப்பிணியைப் போக்குவதே தர்மம். "வள்ளலார் உபகாரச்சாலையின் ஜீவகாருண்யப் பணியானது" பசி நேரிட்டபோது அந்தப் பசியை போக்கிக்கொள்ள முடியாத ஏழைகள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள், மனநோயாளிகள் உள்ளிட்டோருக்கு பேதமில்லாமல் அன்னமிடுதல், ஆகாரம் கொடுத்தல், பசியைப் போக்குதல் - நடைபெறும் இடம் தருமச்சாலை ஆகும்.
வறுமை கொடியது! இளமையில் வறுமை அதனினும் கொடியது!! கலியுகத்தில் பசிப்பிணி மிக மிகக் கொடியது.
பசி கொடியது என்பதை உணர்ந்து, தங்களின் உண்மையான உழைப்பிலிருந்து, தமிழகத்தின் பல்வேறு கிராமத் தருமச்சாலைகள் மூலம் நடைபெறும் தினசரி 2000 மக்களின் பசி போக்கும் தருமச்சாலைப் பணிகளுக்கு தாங்கள் தீபம் அறக்கட்டளைக்கு அள்ளிக் கொடுக்கும் மாதாந்திர தொடர் கருணைமாநிதிக்கு வந்தனம் வந்தனம் வந்தனம்!
பசித்தவர்களுக்கு அன்னம் அளித்தல் - தெய்வீக குணம்
தங்களுக்குள்ளே உள்ள இறையை நிறைவாக வணங்கி மகிழ்கிறோம்! தாங்களும் தங்கள் அன்புக் குடும்பமும், தங்களுடைய சந்ததிகளும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று, நலமோடு வளமோடு வாழ்க என்று தீபம் பிரார்த்தனை செய்கிறது!!!
தொடர்புக்கு
| அமைப்பு | தீபம் அறக்கட்டளை (1997 முதல், 25ஆம் வெள்ளி விழா ஆண்டில்) |
| தொலைபேசி | 9444073635 |
| பதிவு | அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட அறத்தொண்டு நிறுவனம் |
