தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணி
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூரில் குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்
- 100பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு
- 2வேளை சத்தான, சூடான உணவு
- ₹3,000நாளொன்றுக்கு செலவு
- ₹90,000மாதச் செலவு
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் தினசரி 100 குழந்தைகளுக்கு தீபம் அறக்கட்டளை 2 வேளை உணவு வழங்குகிறது. தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…
மெய்யூர்: தினசரி கிராம சேவை
திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3,000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/-) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது.
தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் மாதாந்திர கருணைமாநிதி வாரி வழங்கும் மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணம்.
