
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மாதந்தோறும் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
கீழ்க்கண்ட நோய்களுக்கு சிறந்த முறையில் நரம்புகள் பிடிப்பின் மூலம் குணமாக்கப்படுகிறது:
- கால்வலி
- இடுப்புவலி
- குடல் ஏற்ற வலி
- தோள்பட்டை வலி
- கழுத்துப் பிடிப்பு வலி
- நாட்பட்ட தலைவலி
- சர்க்கரை வியாதி
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த யோக பாலதண்டபாணி சித்த வைத்திய சாலையின் பரம்பரை வைத்தியர் சிவம் V.P.மாதேஸ்வரன் அவர்களின் மேற்பார்வையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த முறையில் சித்த மருத்துவம் பார்க்கப்படும்.
முகாம் விவரங்கள்
| நாள் | 10-09-2025 (ஞாயிற்றுக்கிழமை) |
|---|---|
| நேரம் | காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை |
| இடம் | நித்ய தீப தருமச்சாலை வளாகம், 7/8, தருமச்சாலை வீதி, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை-42 |
| முன்பதிவு | இல்லை |
| கட்டணம் | இல்லை |
| தொலைபேசி | 044 4335 8232 |
| மேலும் விவரங்களுக்கு | 044-43358232, 9444073635 |
விரும்பினால் தீபம் அறக்கட்டளையின் தொடர் அறப்பணிகளுக்கு நன்கொடை கொடுக்கலாம்.
மருத்துவ முகாமிற்கு வரக்கூடிய அனைவரும் தருமச்சாலையில் அருள் உணவு உண்டு மகிழும்படி தீபம் அன்போடு கேட்டுக் கொள்கிறது.
அனைவரும் வருக! ஆரோக்கிய நலம் பெறுக!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
நோயில்லா பாரதம் படைப்போம் … இயற்கை வழியில்…
ஆரோக்கியமாக வாழ்வதே ஆனந்தம்.
குறிப்பு: மருத்துவ முகாம் குறித்த செய்தியை தங்களைச் சார்ந்தவர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் தெரியப்படுத்துங்கள்.
தயவுடன்…
தீபம் அறக்கட்டளை · 9444073635
என்றென்றும் சமுதாயப்பணியில்… மனித நேயப் பணிகளில் 28 ஆண்டுகளாக…
