
04.07.25 இன்று, ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று வழங்குவது போல, 80 மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்ற குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியும், மருத்துவ உதவியாக 8 தனி நபர்களுக்கு காசோலைகளும் வழங்கப்பட்டன.
- 80குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி
- 8நபர்களுக்கு டயாலிசிஸ் மருத்துவ உதவி
- ₹40,000டயாலிசிஸ் உதவி காசோலையாக
தொடர் நன்கொடைகளாகவும் பொருளாகவும் வாரி வழங்கும் வள்ளல்களின் திருப்பாதங்களை வணங்கி மகிழ்கிறோம்.
இம்மாத அரிசி மற்றும் மளிகை உபயதாரர்கள்
இம்மாதம் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உபயம் செய்த அருளாளர்கள்:
| எண் | அருளாளர் | உபயம் |
|---|---|---|
| 1 | திரு K சம்பத்குமார் ஐயா, சைதாப்பேட்டை | 25 குடும்பங்களுக்கு |
| 2 | திருமதி உமாதேவி அம்மையார் அவர்கள் | 10 குடும்பங்களுக்கு |
| 3 | எக்ஸலண்ட் ஹாஸ்பிடல், வேளச்சேரி | 10 குடும்பங்களுக்கு |
| 4 | அரிமா ரஜினி S மணவாளன் ஐயா, பள்ளிக்கரணை | 7 குடும்பங்களுக்கு |
| 5 | திரு A பழனி ஐயா | 2 குடும்பங்களுக்கு |
| 6 | திரு P முருகன் ஐயா | 4 குடும்பங்களுக்கு அரிசி |
| 7 | திரு G குப்புசாமி, திருநெல்வேலி | 10 குடும்பங்களுக்கு |
| 8 | திருமதி B பத்மாவதி அம்மையார் அவர்கள் | 2 குடும்பங்களுக்கு |
| 9 | மேலும் ஐவர் | தலா ஒரு குடும்பத்திற்கு |
டயாலிசிஸ் மருத்துவ உதவி
இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக இன்று வழங்கப்பட்டது. அனைவருக்கும் பிரார்த்தனையுடன் வயிறார உணவு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்கு, மாரி போல் பாரி போல், வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி.
இந்த சேவைக்கு உதவ
உபயதாரர்களை வரவேற்கிறோம்.
| திட்டச் செலவு | ₹1,50,000/- (மாதத்திற்கு) |
|---|---|
| GPay | 9444073635 |
தீபம் அறக்கட்டளை (1997 முதல்… 28ஆம் ஆண்டில்…)
7, தருமச்சாலை வீதி, தண்டீஸ்வரம் கோவில் அருகில், வேளச்சேரி, சென்னை 42.
இது ஓர் அரசு பதிவு செய்யப்பட்ட, 80G வரிவிலக்கு அளிக்கப்பட்ட, தமிழ்நாடு முதல்வர் மற்றும் ஆளுநர் திருக்கரங்களால் நேரில் அரசு விருது பெற்ற, ஓர் அறத்தொண்டு நிறுவனம்.
இணையதளம்: www.deepamtrust.org
