
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை அரசு பதிவு செய்யப்பட்டு, கடந்த 28 ஆண்டுகளாக தினசரி மக்களின் பசி போக்கும் பணி மட்டுமல்லாது, தொடர் சமுதாயப் பணியாக, சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் வசதியின்மையால் குடும்ப ஏழ்மை நிலையில் உள்ள பிளஸ் 2 படித்த மாணவ மாணவிகள் மேற்படிப்பை தொடர கடந்த 15 ஆண்டுகளாக தீபம் அறக்கட்டளை ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தி, கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.
- 1352மாணவச் செல்வங்களுக்கு இதுவரை உதவி
- ₹80,60,965கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டது
- 15ஆண்டுகளாக கல்வி உதவி
இதுவரை 1352 மாணவச் செல்வங்களுக்கு மொத்தம் ₹80,60,965/- கல்வி உதவித்தொகையாக வழங்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். சமுதாய அக்கறையோடு ஏழை மாணவர்களின் கல்விக்கு கடந்த 15 ஆண்டுகளில் ₹80 லட்சங்கள் அள்ளிக்கொடுத்து உதவிய அருளாளர்களை, நன்கொடையாளர்களை, வாழும் தெய்வங்களை, தீபம் அறக்கட்டளை வணங்கி வாழ்த்தி மகிழ்கிறது.
2025-2026 கல்வியாண்டுக்கான விண்ணப்பங்கள்
மேலும் வரும் 2025-2026 கல்வியாண்டில் டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல் பயில விரும்பும் அல்லது படித்துக் கொண்டிருக்கும் மாணவ மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே அனுப்பவேண்டும்.
| கல்வியாண்டு | 2025-2026 |
|---|---|
| படிப்புகள் | டிப்ளமோ, டிகிரி, என்ஜினியரிங், மெடிக்கல் |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்-லைன் மூலம் மட்டுமே |
| விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய கடைசி நாள் | 06.06.2025 |
விண்ணப்பிக்கும் வழிமுறை
- விண்ணப்பிக்கும் முன்பு கீழுள்ள இணைப்பில் சென்று அறிவுரைகளை படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.
- விண்ணப்பிக்க கீழுள்ள லிங்கை பயன்படுத்தவும்.
- பெறப்பட்ட விண்ணப்பங்களில் ஏழ்மைத் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ மாணவிகளுக்கு நேர்காணல் நடத்தப்படும்.
- நேர்காணலுக்கு பிறகு “தீபம் கல்வி உதவி குழு” பரிந்துரை செய்த மாணவ மாணவிகளுக்கு, கல்வி உதவித் தொகை மாணவர்கள் பயிலும் கல்லூரிக்குக் காசோலையாகச் செலுத்தப்படும்.
குறிப்பு
- பள்ளி மாணவ மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டாம்.
- தாய்/தந்தை இல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கியவர்கள், அரசு கல்லூரிகளில் பயில்பவர்களுக்கு, கிராமத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் எந்த அறிவிப்பும் இன்றி நிராகரிக்கப்படும்.
- கல்வி உதவி குழு பரிந்துரை செய்யும் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். தீபம் அறக்கட்டளையின் கல்வி உதவி குழுவின் முடிவே இறுதியானது.
- விண்ணப்பம் நிரப்பும் போது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழ்க்கண்ட தொலைபேசி எண் அல்லது WhatsApp எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
| தொலைபேசி எண் | 044-4335 8232 |
|---|---|
| WhatsApp எண் | +91 44-4335 8232 |
