தீபம் அறக்கட்டளையின் அறப்பணிக்கு அருட்கொடை தந்து நீங்களும் அருளின்பம் பெற அன்புடன் அழைக்கிறோம்.
அன்னதானம்
| உபயம் | தொகை |
|---|---|
| காலையில் கஞ்சி வார்க்க | ₹1,000 |
| மதியம் உணவளிக்க | ₹5,000 |
| மதியம் சிறப்புணவு (வடை/அப்பளம், பாயசம்/கேசரி) | ₹7,000 |
| இரவு உணவளிக்க | ₹3,000 |
| நித்ய தீப தருமச்சாலையில் ஒரு நாள் அன்னமளிக்க | ₹11,000 |
| அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் காலையில் கஞ்சி மற்றும் மதிய உணவளிக்க | ₹5,000 |
| திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் காப்புக்காடு பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு நாள் அன்னமளிக்க | ₹5,000 |
| அனைத்துத் தருமச்சாலைகளிலும் அன்னமளிக்க | ₹25,000 |
விரும்பும் தேதியில் அன்னதானம் செய்ய, இணையத்தில் முன்பதிவு செய்யுங்கள்: இப்போதே UPI மூலம் செலுத்தலாம், அல்லது முன்பதிவு செய்துவிட்டுப் பின்னர் செலுத்தலாம்.
மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!
வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80G-இன் கீழ் நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு.
பரிவர்த்தனை விவரங்களும் ரசீதும்
தாங்கள் வங்கி பரிமாற்றம் / Google Pay / PhonePe / UPI போன்ற முறைகளில் நன்கொடை அளிக்கும் போது, நன்கொடையாளரின் முழுமையான விவரங்கள் எங்களுக்கு எப்போதும் கிடைப்பதில்லை.
- 🏦 வங்கி கணக்கில் இருந்து நன்கொடை செலுத்தும்போது சில நேரங்களில் பெயர் மட்டும் எங்களுக்கு தெரியும்.
- 📱 Google Pay / PhonePe / UPI போன்ற UPI முறைகளில் நன்கொடை செலுத்தும்போது, சில பரிவர்த்தனைகளில் நன்கொடையாளர் யார் என்பதும் தெரியாமல், பணம் வந்த தேதி, நேரம் மற்றும் தொகை மட்டுமே எங்களுக்குத் தெரியக்கூடும்.
இதனால், தாங்கள் நன்கொடை அளித்திருந்தாலும், நன்கொடையாளர் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைத் தகவல்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றால், அந்த நன்கொடை யாருடையது என்பதை உறுதி செய்து ரசீது வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது.
- நன்கொடை அளித்தவுடன், இந்த இணையதளத்தில் உள்ள பரிவர்த்தனை விவரங்களை அனுப்புங்கள் படிவத்தில் பரிவர்த்தனை விவரங்களை (UTR / பரிவர்த்தனை எண், தொகை, தேதி) அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். படிவத்தைப் பயன்படுத்த முடியாவிட்டால், +91 44-4335 8232 என்ற WhatsApp எண்ணுக்கு அனுப்பலாம்.
- தாங்கள் நன்கொடை வழங்கிய 24 மணி நேரத்திற்குள், நன்கொடை பெறப்பட்டதற்கான ஒப்புகை / தகவல் SMS, Email மற்றும் WhatsApp மூலம் அனுப்பப்படுகிறது.
- அதன்பின்னர், நன்கொடை தொடர்பான தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, பொதுவாக 3 முதல் 5 வேலை நாட்களுக்குள் WhatsApp மூலம் ரசீது அனுப்பப்படுகிறது.
தாங்கள் நன்கொடை வழங்கியிருந்தும், கீழ்க்கண்டவாறு இருந்தால் நன்கொடை தகவல் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம்:
- ❌ 24 மணி நேரத்திற்குள் ஒப்புகை வரவில்லை
- ❌ SMS / Email / WhatsApp மூலம் எந்த தகவலும் வரவில்லை
- ❌ 3-5 வேலை நாட்களுக்குள் ரசீது கிடைக்கவில்லை
அவ்வாறு இருந்தால் தயவுசெய்து எங்களைத் தொடர்புகொண்டு பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட் / பரிவர்த்தனை விவரங்கள் அனுப்புங்கள்.
தங்களின் நன்கொடை தகவல் எங்களுக்கு கிடைத்தவுடன், சரிபார்த்து ரசீது வழங்குவதற்கான நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்படும்.
தொடர்பு கொள்ளும் முறை
| நிலை | தொடர்புக்கு | எண் / மின்னஞ்சல் |
|---|---|---|
| நிலை 1 | அலுவலகம் (காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை) | +91 44-4335 8232 deepamtrustvelachery@gmail.com |
| நிலை 2, நிலை 1 மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால் | அலுவலகப் பொறுப்பாளர் (Office In-charge) | +91 44-4335 8232 (WhatsApp) |
| நிலை 3, நிலை 2 மூலமும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் | நிறுவன அறங்காவலர் (Founder Trustee), Dr. Balakrishnan M. | 9444073635 |
🙏 நன்கொடையாளர்களின் ஒத்துழைப்பே எங்கள் பணிகளை சிறப்பாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ள உதவுகிறது.
தாங்கள் வழங்கும் ஒவ்வொரு நன்கொடைக்கும் உரிய ஒப்புகை மற்றும் ரசீது சரியான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த தகவல்களை கேட்டுக்கொள்கிறோம். மேலும், ஒவ்வொரு நிதியாண்டு முடிவிலும் நன்கொடையாளர்களின் விவரங்கள் வருமான வரித்துறைக்கு Form 10BD மூலம் சமர்ப்பிக்கப்படுகின்றன. ஒருமுறை தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, நன்கொடை விவரங்களில் பெயர், PAN, தொகை போன்ற மாற்றங்களைச் செய்வது எங்களால் இயலாது. எனவே, ரசீது மற்றும் நன்கொடை விவரங்களை சரியான நேரத்தில் சரிபார்த்துக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
💛 சமூக சேவையில் எங்களுடன் இணைந்து பயணிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.
காசோலை / வரைவோலை மூலம் நன்கொடை
‘DEEPAM TRUST’ என்ற பெயரில் காசோலை / வரைவோலையை (Cheque / DD), தங்களின் பெயர், தொடர்பு எண், அஞ்சல் குறியீட்டுடன் கூடிய முழு முகவரி மற்றும் மின்னஞ்சல் (இருந்தால்) ஆகியவற்றுடன் கீழ்க்கண்ட அலுவலக முகவரிக்கு அனுப்பலாம்.
| காசோலை / வரைவோலை பெயர் | DEEPAM TRUST |
| அலுவலக முகவரி | தீபம் அறக்கட்டளை, நித்ய தீப தருமச்சாலை, எண் 7/8, புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி, சென்னை 600 042 |
வங்கிப் பரிமாற்றம் அல்லது UPI மூலம் பணம் செலுத்தியவர்கள், கீழே உள்ள படிவத்தில் பரிவர்த்தனை விவரங்களை நிரப்பி அனுப்பவும். தேவையான விவரங்களை நிரப்பினால் மட்டுமே எங்களால் உங்களுக்கு ரசீது அனுப்ப இயலும்.
பரிவர்த்தனை விவரங்களை அனுப்புங்கள்
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அரசு பதிவு பெற்ற நிறுவனமா?
ஆம், தீபம் அறக்கட்டளை அரசு பதிவு பெற்ற சமுதாய தொண்டு நிறுவனம். அரசு பதிவு எண்: 2035/2007.
தீபம் அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
விவரங்களுக்கு சுயவிவரம் பக்கத்தைப் பார்க்கவும்.
எவ்வாறு நன்கொடை அளிப்பது?
அலுவலகத்திலும், நித்ய தீப தருமச்சாலையிலும் நேரில் வந்து நன்கொடை அளிக்கலாம். அன்னதானத்திற்கு தேவையான அரிசி மற்றும் மளிகை பொருட்களும் வழங்கலாம்.
நேரில் வரமுடியாதவர்கள் அலுவலக முகவரிக்கு Deepam Trust என்ற பெயரில் காசோலை (Cheque) / வரைவோலை (DD) அனுப்பலாம்.
தீபம் அறக்கட்டளை வங்கிக் கணக்கிற்கு நேரடியாகப் பணம் அனுப்பலாம் அல்லது UPI மூலம் செலுத்தலாம்; விவரங்கள் எங்கள் நன்கொடை பக்கத்தில் உள்ளன. அன்னதானத்தை இணையத்திலும் முன்பதிவு செய்யலாம்.
எவ்வளவு தொகை நன்கொடை அளிக்கலாம்?
ஒருநாள் அன்னதானத்திற்கு ஆகும் செலவு இந்த பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற இதர சமூக பணிகளான கல்வி உதவி, மருத்துவ உதவி, அரிசி உதவி, ஆடைகள் உதவி, வாழ்வாதார உதவி போன்றவைகளுக்கு தங்கள் சக்திக்கேற்ப, விருப்பத்திற்கேற்ப நன்கொடை தந்து மகிழலாம்!
நன்கொடைகளுக்கு ரசீது வழங்கப்படுமா?
வழங்கப்படும். 5 வேலை நாட்களுக்குள் தங்களுடைய முகவரிக்கு அஞ்சல் மூலம் ரசீது அனுப்பி வைக்கப்படும்.
ரசீது பெறவில்லை என்றால் +91 44-4335 8232 / +91 94440 73635 என்ற எண்களைத் தொடர்புகொள்ளவும்.
வருமான வரிவிலக்கு பெறலாமா?
வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 80G-இன் படி வருமான வரிவிலக்கு பெற்ற தொண்டு நிறுவனம்.
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடை அளிக்கலாமா?
வெளிநாட்டு பணமதிப்பில் நன்கொடையளிக்க முடியாது.
தங்களுடைய சேவைகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?
மாதந்தோறும் தீபநெறி என்ற மாத இதழ் வெளியிடப்படுகிறது, அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும் இணையதளம், சமூக ஊடகம் மற்றும் குறுந்தகவல் மூலம் சேவைகள் பகிரப்படுகின்றன.
