தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, தமிழ்நாடு முதல்வரும் தமிழ்நாடு ஆளுநரும் விருது வழங்கி கௌரவித்துள்ளனர்.
2022: தமிழ்நாடு முதல்வர் வழங்கிய விருது
| நாள் | 05.10.2022 |
| வழங்கியவர் | மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் |
| நிகழ்வு | தமிழ்நாடு அரசு நடத்திய வள்ளலார் 200 விழா, சென்னை |
| பாராட்டுக்கு உரியது | தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகள் |
தீபம் அறக்கட்டளையின் தொடர் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் திருக்கரங்களால் தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் வள்ளலார் 200 விழாவில் 05.10.2022 அன்று விருது வழங்கப்பட்டது.
2023: தமிழ்நாடு ஆளுநர் வழங்கிய விருது
| நாள் | 05.10.2023 |
| வழங்கியவர் | மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் |
| நிகழ்வு | திருவருட்பிரகாச வள்ளலார் சிலை திறப்பு விழா, ஆளுநர் மாளிகை, சென்னை |
| பாராட்டுக்கு உரியது | தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகள் |
தீபம் அறக்கட்டளையின் சமுதாயப் பணிகளைப் பாராட்டி, ஆளுநர் மாளிகையில் 05.10.2023 அன்று நடைபெற்ற வள்ளலார் சிலை திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் விருது வழங்கினார்.

தீபம் அறக்கட்டளையின் நன்கொடையாளர்கள், நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கு ஓயாது உழைக்கும் அனைவருக்கும் இவ்விருதுகளைச் சமர்ப்பிக்கிறோம்! எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஆதாரம்: தீபம் அறக்கட்டளை செயல்பாடுகள் நூல், 2024.
