Annadhanam

தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னை மாநகர் வேளச்சேரியில் 1997-ம் ஆண்டு முதல் பசியால் வாடும் துயர் அறிந்து சிறுசேவையாக தொடங்கி 2007- ம் ஆண்டு ஓர் அரசு பதிவு பெற்ற ஆன்மநேய அறத்தொண்டு நிறுவனமாக தீபம் அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகாலமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் தினசரி நித்ய தீப தருமச்சாலை வாயிலாகவும், நடமாடும் தருச்சாலை வாயிலாகவும், தமிழகம் முழுவதும் 11 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற ஆடுகின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

Annadhana Arputhangal

Morning Gruel

பசியாற்றுவிக்க நினைப்பவன் -மனிதன்
பசியாற்றுவிப்பவன் -மாமனிதன்
பசியாறியவர்களைக் கண்டு மகிழ்பவன் -மகான்
பசியாறியவர்களால் பராட்டப்படுபவன் -கடவுள்


வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாடில் 11தருமச்சாலைகளின் மூலம் தினசரி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும், தாய்மார்களுக்கும், ஆதரவற்ற அன்பு உள்ளங்களுக்கு மனிதநேய உள்ளன்போடு, நூற்றுக்கணக்கான ஆன்மநேய அருளாளர்களின் அன்போடும், தயவோடும் எந்த வித பாகு பாடும் இல்லாமல், மூலிகை கஞ்சி (புதினா, மிளகு, திப்பிலி, இஞ்சி, சீரகம் கலந்த கஞ்சி) வழங்கப்படுகிறது.

View More

Mobile Annadhana

"ஜீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்” என்பதால் அதனை வீதிதோறும், வீடுதோறும் சென்று, அதைச்சேர்க்கதுணைபுரியும் சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை கைக்கொண்டுள்ள பல சாதனைகளில், உத்திகளில், செயல்பாடுகளில் நடமாடும்தருமச்சாலையும் ஒன்று.

வசதியற ஏழைக்குடும்பங்கள் வேளச்சேரி, கல்குட்டை போன்ற இடங்களில் பிளாஸ்டிக் அல்லது தகரத்தால் ஒரு கூரை, கிழிந்தபுடவையை கதவாகநினைத்து தொங்குகின்றவீடுகள். பறவைக்கூடு போல கதவில்லை, கழிப்பறையில்லை, அடுத்த வேளைக்கு உணவுமில்லை. சிறுகுழந்தைகளை வைத்துள்ள குடும்பத்தலைவிகள் நமது நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா? வீதிகளில் நம்பார்க்கும் பார்வையற்றோர், கைகால் ஊனமுற்றோர், முதியோர், பசியால்வாடுபவர்கள், இவர்கள் நித்ய தீபதருமச்சாலைக்கு வந்து போகமுடியுமா?

உலக அளவிலான ஒரு தொண்டுநிறுவனம் சிறுவர்களின் நலத்திலும், கல்வியிலும் அக்கறை செலுத்திவருகிறது. சிலமாதங்கட்கு முன்பு அது ஒரு தகவல்வெளியிட்டது. ஒரு குடிசைபகுதியில் 10 வயதுள்ள இரண்டு பையன்களை பேட்டிகாணும்போது, உங்கள்ஆசை என்ன என்று எனகேட்டபோது, நாங்கள் சாகாமல் இருக்க ஆசைபடுகிறோம் என்றார்கள்! உங்களுக்கு ஏன் இந்தபயம்வந்தது? எனக்கேட்டபோது – இந்த சந்தில் நாங்கள் பத்து நண்பர்கள் இருந்தோம். காலை முதல் இரவு வரை ஒன்றாகவே எங்கும் திரிவோம். ஆனால் இந்த ஓராண்டில் எட்டு பேர் இறந்துவிட்டனர். ஏதேதோ நோய் காரணம் என்றார்கள்! ஆரோக்கியமான உணவு இல்லாததே இதற்குகாரணம் என அத்தொண்டுநிறுவனம் பல கோணங்களில் செயல்பட தொடங்கிற்று.

நம்மைப்பொறுத்தவரை ஆரோக்கியமான உணவு தேவைதான். கிடைத்தால் சந்தோஷம்தான். ஆனால் பசிக்கு உணவு – சாதாரண உணவு கிடைப்பதே அரிதாகிக்கொண்டிருக்கிறது. இதைக்கண்ட “வள்ளலார்” ஒருவர் கஷ்டப்படுவதை கண்ட போதாயினும், கேட்டபோதாயினும், அறிந்த போதாயினும் ஓடிச்சென்று அதைநிவர்த்திக்க வேண்டும்” என்பதாக சொல்கிறார். இதை ஜீவகாருண்ய ஒழுக்கத்தில் காணலாம். அந்த உரைநடையில் அவர்சொன்னதை நடை முறையில் கொண்டுவர “நடமாடும் தருமச்சாலை” ஒன்றை தீபம் அறக்கட்டளை உருவாக்கிகடந்த 10ஆண்டுகளாக பசித்தவர்களுக்கு அன்னம் கொடுத்துக்கொண்டிருக்கிறது.



View More
Vadalur Service

"ஒவ்வொரு மாதமும் பூச நன்னாளில் வடலூர் சத்ய தருமச்சாலையில் சேவை செய்ய சேவதாரிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். பூசத்திற்கு முந்தய நாள் இரவு 9 மணிக்கு வேளச்சேரி நித்ய தருமச்சாலையில் இருந்து வாகனம் வடலூர் செல்லும்."


View More
Children’s Homes

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் சார்பில் மகிழ்வித்து மகிழ்வோம் என்ற கொள்கையின் அடிப்படையில் ஆதரவற்ற ஏழை குழந்தைகளையும்,முதியோர்களையும் மகிழ்விக்கும் நோக்கத்தோடு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் காரம் வழங்கி மகிழ்விப்பது வழக்கம்.


View More
Dharumachalas

தமிழகம் முழுவதும் 11 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் 11 தருமச்சாலைகளின் மூலமாக தினசரி காலை பல்லாயிரக்கணக்கானோருக்கு கஞ்சி வார்த்தல் சேவையும், தினசரி பல நூற்றுக்கணக்கான வறியவர்களுக்கு பசியாற்றுவித்தல் சேவையும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையாலும், தயா உள்ளம் கொண்ட தயவாளர்களின பெருந்தயவாலும், ஓயாது உழைக்கின்ற சேவடிகளின் கடுமையான உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது


View More


Meiyur

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தில் 100 குழந்தைகளுக்கு தினசரி தீபம் அறக்கட்டளை நாளொன்றுக்கு ₹3000 வீதம் (மாதம் ரூபாய் 90,000/- மூலம்) கிராம சேவையாக, சத்தான, சூடான, சுகாதாரமான, சுவையான, 2 வேளை உணவு வழங்குகிறது.

தெரு விளக்குகள் இல்லாத, காப்பு காடுகளை ஒட்டிய, மிகவும் பின்தங்கிய கிராமத்தில், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும், பழங்குடியின குழந்தைகளுக்கு தினசரி உணவு வழங்கும் காட்சி…

தினசரி குழந்தைகளின் பசி போக்க தொடர் மாதாந்திர கருணைமாநிதி வாரி வழங்கும் மனித தெய்வங்களின் திருப்பாதங்களை வணங்குகிறோம்.
அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அர்ப்பணம்..


View More
Children's, Old age& Mentally challenged Home

ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடி மகிழ்வித்து சிறப்பு உணவு அளிக்கபடுகிறது.


View More
Food for Road side poor

நடமாடும் அன்ன தருமச்சாலையின் ஒரு பகுதியாக விடுமுறை நாட்களில் சமைத்த உணவுகளை வாகனத்தில் எடுத்து சென்று சாலை ஓரங்களில் இருபவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது.



View More
Food to Temple Devotees

வேளச்சேரி பகுதியில் உள்ள கோவில்களுக்கு திருவிழாக் காலங்கள்,கூட்டுவழிபாடு மற்றும் சிறப்பு நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல வகையான அன்ன பிரசாதம் வழங்கப்படுகிறது.



View More
Food to Sanmarga Sangams

சன்மார்க்கசங்கங்கள் நடத்தும் கூட்டங்கள், சத்சங்கங்கள் மற்றும் சன்மார்க்க விழாக்களுக்கு சிறப்பு உணவு அளிக்கப்படுகிறது..


View More

Annadhana Video

Play Video

Recent News

Contact us

  • No.7/8,Putheri Karai,
    (Near Dandeeswarar Temple) Velachery , Chennai,
    Tamilnadu, India – 600 042
  • admin@deepamtrust.org
  • +91-44-2244 2515
  • Mon to Sat - 9:00AM to 9:00PM
    (Sunday Closed)