This page is not available in English yet, so it is shown in Tamil.

🪔 அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி
🌺 தீபம் அறக்கட்டளை – ஜோதி மாமலை
வள்ளலார் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா அழைப்பிதழ் வழங்குதல் 🌺

இன்று வேலூர் மாவட்டம், ரத்தினகிரியில் அமைந்துள்ள அருள்மிகு ரத்தினகிரி திருமுருகன் திருக்கோயிலில், ரத்தினகிரி சித்தர் ஐயா பாலமுருகன் அடிமை சுவாமிகள் அவர்களைத் தீபம் அறக்கட்டளையின் நிறுவனர் திரு. பாலகிருஷ்ணன் ஐயா அவர்களின் தலைமையில் நேரில் சந்தித்து, நமது ஜோதி மாமலை வள்ளலார் திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி, விழாவில் பங்கேற்க அன்புடன் அழைப்பு விடுத்தோம்.
இந்நிகழ்வில்
திரு. காந்தி அவர்கள், திரு. பாரதி அவர்கள், திரு. மாதவன் அவர்கள், திரு. சதுரகிரி . அவர்கள், திரு. சரத்குமார் அவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நமது அன்பான அழைப்பினை ஏற்றுக்கொண்டு, குடமுழுக்கு நன்னீராட்டு விழாவில் நேரில் கலந்து கொள்வதாக சித்தர் ஐயா பாலமுருகன் அடிமை சுவாமிகள் அவர்கள் உறுதி அளித்திருப்பது நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும் பெருமகிழ்வையும் அளிக்கிறது.
அவர்களின் வருகை நமது விழாவிற்கு மேலும் ஆன்மிகச் சிறப்பையும் அருளாசியையும் சேர்க்கும் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்.
இவ்விழா சிறப்புடன் நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும், ஆதரவும், அருளாசியும் வேண்டுகிறோம்.
🙏 அனைவரின் பார்வைக்கும் மகிழ்ச்சியுடன் பகிர்கிறோம்.
தீபம் அறக்கட்டளை
ஜோதி மாமலை – வள்ளலார் ஞானசபை மற்றும் தர்மசாலை
🙏 அருட்பெருஞ்ஜோதி! தனிப்பெருங்கருணை!
