






இயற்கை சீற்றங்களில் மக்களுக்கு உதவி
இயற்கையின் கோரத்தாண்டவம் சில நேரங்களில் இந்த உலகில் வாழும் ஜீவராசிகளை நிலைகுலைய வைத்து விடுகிறது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, கடும் குளிர், கடும் வெயில், அடைமழை, கொரோனா பெருந்தொற்றால் காலம் போண்றவைகளால் பாதிப்புகள் உருவாகின்றன.
தீபத்தின் ஆன்மநேய அறப்பணிகளில் ஒன்றான பார்வையற்றவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குடும்பங்களுக்கு ஆயுட்கால வாழ்வாதார உதவி கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அரிசி மற்றும் மளிகை பொருட்கள் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று வழங்கப்பட்டு வருகிறது.
இந்த புண்ணியத் தொண்டில் தாங்களும் பாகம் பெற்று ஆன்மலாபம் அடைய தங்களின் கமலமலர் பாதம் பணிந்து விண்ணப்பிக்கின்றோம். தாங்கள் மாதந்தோறும் ஒரு பார்வையற்ற மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் மாதத்திற்கு உண்டான 25 Kg அரிசி மற்றும் மளிகை பொருட்களான துவரம்பருப்பு ஆயில் இதர பொருட்களையும் வாரி வழங்கிட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம்.
ஒருவருக்கு அளிக்கப்படும் அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 2000/- வரை செலவு ஆகும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தானமும், தவமும் செய்வாராகில் வானவர் நாடு வழி திறந்திடுமே என்ற தர்மவரிகளுக்கு ஏற்பவும் எல்லா உயிர்களும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றியம் பராபரமே என்ற தாயுமானவர் வாக்கிற்கிணங்க
“மண் திணி ஞாலத்து உயிர் வாழ்வோருக்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற சிலப்பதிகார நாயகி கண்ணகியின் பொன்னான வரிகளுக்கு ஏற்ப,
“உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூரெல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க” என்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானின் உண்மை அறநெறிக்கு ஏற்ப தங்களை இணைத்துக் கொண்டு தர்மத்தின்படி வாழ தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
View More
மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்று உடுத்த உடை. அந்தவாகையில் உடை இல்லாதோர்க்கு உதவும் வகையில், நன்கொடையாளர்களிடம் இருந்து புதிய ஆடைகள் மற்றும் நல்ல நிலையில் மற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் உள்ள பழைய ஆடைகளை பெற்று இல்லாதோர்க்கு வழங்கப்படுகிறது. இதன் ஒருபகுதியாக வருடம் தோறும் மார்கழி மாதத்தில் கடும் குளிரில், சாலையோரத்தில் உறங்குபவர்களுக்கு நள்ளிரவில் நேரில் சென்று போர்வைகள் வழங்கப்படுகிறது.
View More
வாழ்வாதார உதவி!
இரயிலில்பொருட்கள் விற்கும் பார்வையற்றோரை நாம் பார்த்திருப்போம், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில், எழுதுபொருட்கள், நோட்டு, கடலை மிட்டாய், பர்பி, போன்ற பல்வேறு பொருட்கள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
View More
ஒவ்வொருவருடமும்கோடைகாலங்களில்சுட்டெரிக்கும் கடும் வெய்யிலில் வாடும் அன்பர்களின் தாகம் தணிக்கும் பொருட்டு நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தினசரி பல நூற்றுக்கணக்கான அன்பர்களுக்கு நீர்மோர் வழங்கப்படுகிறது.தற்போது தினமும் வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவன்கோவில் ஆர்ச் அருகில் காலை11 மணி முதல் நீர்மோர் வழங்கப்படுகிறது.
View More
மார்கழி விடியலின் சிறப்பு!
“மாதங்களில் நான் மார்கழியாக இருக்கின்றேன்”என பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். மார்கழி மாதம் வந்ததும் விடியற்காலையில் எழுவதும், குளிப்பதும், வாசலில் கோலமிடுவதும், திருப்பாவை, திருவெம்பாவை பாடுவதும், பல கோயில்களில் பக்தி பாடல்களை ஒலிப்பெருக்கியில் ஒலிக்கச் செய்வதும், சபரி மலைக்கு செல்லும் பக்தர்களின் சரணகோஷம் விண்ணைப் பிளக்கும் படியும் இருக்கும். மார்கழி மாதம் விடியலில் எழுவதும் இறைவனை தொழுவதும் நன்மை பயக்கும். இதில் சந்தேகம் வேண்டாம். இயேசு நாதர் பிறந்ததும் இந்த மாதத்தில் தான். அவர் வழி நிற்போறும் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா எடுப்பதும் மார்கழி மாதம் தான்.
விடியற்காலை எழுவது இந்த மாதத்தின் சிறப்பு என்றாலும், இந்த மாதம் வந்தால் சிலர் விடியலில் விழித்து எழவேண்டிய அவசியம் இருப்பதில்லை. காரணம் அவர்கள் இரவில் உறங்குவதில்லை. சாலையோரத்தில், பஸ் நிறுத்தங்களிலும், இரயில் நிறுத்தங்களிலும், சாக்கடை மூடிகள் மீதும், கடை படிகட்டின் மீதும், முழங்காலை தலையில் தொடுமளவு மடக்கி, ஆறடி உயரமுள்ள மனிதன் மூன்றடியாகி நைந்து போன சின்ன ஒரு அழுக்கு துணியால் தேகமெல்லாம் மூடி குளிரில் நடுங்கி சுருண்டு கிடப்பதால் தூக்கம் வருவதில்லை. இவர்களின் மார்கழி மாத விடியல் இப்படித்தான் விதிக்கப்பட்டுள்ளது.
கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த நமது நாட்டில், அதில் ஒருவனான “பேகன்” எனும் அரசன், குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த ஒரு மயிலுக்கு தான் போர்த்தியிருந்த விலையுயர்ந்த போர்வையை எடுத்து அதற்குப் போர்த்தி அதன் குளிரைப் போக்கி, அது ஆடதொடங்கியதை கண்டு மகிழ்ந்தான், என்பதை சங்ககால பாடல் கூறுகிறது.
மார்கழி மாத குளிரில் நடுங்கிகொண்டே பாதி உறக்கத்திலிருப்பவர்களை பாதி இரவில் எழுப்பி, இதுவரை 6000 போர்வைகளை வழங்கியுள்ளது சென்னை, வேளச்சேரியில் இயங்கும் தீபம் அறக்கட்டளை. ஒரு போர்வை கொடுத்தற்கே அந்த “பேகன்” எனும் அரசனை ஓராயிரம் ஆண்டுகளாக பேசி வியக்கும் நாம், இந்த 6000 போர்வையை போர்த்திய தீபம் நன்கொடையாளர்களை ஒரு கோடி ஆண்டுகட்கு போற்றியே ஆகவேண்டும் அல்லவா? இப்பணி தொடர இந்த மார்கழி மாதம் என்ன செய்ய நினைக்கிறீர்களோ அந்த பரோபகாரம் மட்டுமே சன்மார்க்க சங்கத்தவர் விழைவு. முற்றிலும் வித்தியாசமான மாற்றத்துடன் சிறக்கட்டும் மார்கழி விடியலின் சிறப்பு.
மார்கழி மாத குளிரில் வாடும் வறியவர்களுக்கு போர்வை, கம்பளம் தந்து புண்ணிய பலன் விரும்புவோர் தீபம் அறக்கட்டளைக்கு நன்கொடை தந்து உதவலாம்.
View More
Service Photos:
Recent News
20.02.2025 – 522வது வார அகவல் பாராயணம்.
ஜோதி மாமலையில் தர்ம சாலை துவக்கம் – 16.2.25
14.02.2025- தீப ஒளி விளக்கு பூசை வழிபாடு.
Contact us
- No.7/8,Putheri Karai, (Near Dandeeswarar Temple) Velachery , Chennai, Tamilnadu, India – 600 042
- admin@deepamtrust.org
- +91-44-2244 2515
-
Mon to Sat - 9:00 AMto 6:00 PM
(Sunday Closed)