Education

கல்வி தீபம் ஏற்றும் அறக்கட்டளை!

நல்ல மதிப்பெண்கள் பெற்றும் வறுமையினால் தனது உயர்கல்வியை தொடரமுடியாதவர்கள், தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள், கிராமப்புற மற்றும் ஏழை எளியமாணவ-மாணவியர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு கல்வி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 2010-இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வி சேவை கடந்த 14 ஆண்டுகளில் 1269 மாணவ மாணவியர்களுக்கு ரூ.₹74 லட்சம் வரை வழங்கியுள்ளோம். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு மட்டும்தான் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், பள்ளிக்கல்வி பயிலும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கும் உதவி செய்யப்பட்டு வருகிறது.

YearNo of StudentsAmounts
2010-1180375000
2011-1297567365
2012-1311561800
2013-1485511680
2014-1573450000
2015-1687354920
2016-17127625811
2017-18112644172
2018-19104667470
2019-20115572767
2020-2160360041
2021-2253357939
2022-2389879490
2023-2470413950
Total12677398605

செயல்பாடு
  1. கல்விக்கான நிதியுதவி தேவைப்படுவோர் தங்களின் விபரங்களை தபால் வாயிலாகவும், நேரடியாகவும் கொடுத்து தங்களுக்கான உதவியை தெரிவிக்க வேண்டும்.

  2. கல்வி உதவித்தொகை விண்ணபத்தில் தனது படிப்பு, கல்வி நிறுவனம், முகவரி, தனது கல்வித் தேர்ச்சி, தேவைப்படும் நிதியுதவியின் அளவு, ஆகிய விபரங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

  3. தகுதியானவிண்ணப்பங்கள் கல்வி உதவிக்குழுவினரால் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.

  4. கல்வி உதவிக்குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும் மாணவ மாணவியர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கபடுகின்றனர். தொலைதூரத்தில் இருந்து வருவோருக்கு போக்குவரத்து கட்டணம் வழங்கப்பட்டுவிடுகிறது.

  5. நேர்முக தேர்வில் தேர்வான மாணவ மாணவியர்களுக்கு கல்விக்கட்டணம் வழங்கப்படுகிறது. (உயர்ந்த நோக்கோடு செயல்படுத்தப்பட்டுவரும் இந்தக் கல்வி நிதி உதவி அதற்காக மட்டுமே பயன்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியோடு இருப்பதால் மாணவர்களுக்கான கல்வி நிதியுதவியை நேரடியாக அளிக்காமல், பயிற்சிக் கட்டணம், தேர்வுக் கட்டணம் என எந்த தேவைக்காக நிதி கோருகிறார்களோ, அதற்கான நிதியை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனத்தின் பெயரிலயே காசோலையாக வழங்கப்படுகிறது)

Frequently asked question:
Books and Uniforms to School students

வறுமையினால் பள்ளி செல்ல முடியாத குழந்தைகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தகம், குறிப்பேடு மற்றும் அந்த வருடத்திற்குதேவையான பள்ளிச் சீருடைகள் வழங்கப்படுகிறது வழங்கப்படுகிறது.


Tuition Fees

குறைந்த பட்சம் வருடத்திற்கு நூறு ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் தீபம் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது, அதன் தொடர்ச்சியாக கடந்த 14 ஆண்டுகளில் தொழிற்கல்வி, கலை&அறிவியல், பொறியியல், மருத்துவம்மற்றும் பல மேற்படிப்புகள் பயிலும் 1055 மாணவ-மாணவியர்களுக்கு ரூ.₹74/- கல்வி கட்டணமாக அவர்கள் பயிலும் கல்லுரியின் பெயரில் காசோலை வழங்கப்பட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு முதல் கல்வி உதவி தொகை பெற்றவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.கல்விதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஆண்டு தோறும் நடைபெறும் இவ்உயரிய தொண்டில் பங்குபெற தீபம் உங்களை அன்புடன் அழைக்கிறது.


Free Spoken English course to poor students

ஆதரவற்றோர்காப்பகங்களில் உள்ள மாணவ மாணவ மாணவியர்கள் மற்றும் ஆங்கிலம் கற்கும் ஆர்வத்துடன் இருக்கும் ஏழை மாணவ மாணவியர்களுக்கு இலவச ஆங்கில வகுப்புகள் நடத்தப்படுகின்றது.