RICE AND PROVISIONS

80 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு மாதந்தோறும் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் மருத்துவ உதவி 
💥💥💥💥💥💥💥💥💥💥💥
சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளையின் நித்ய தீப தருமச்சாலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமைகளில் கடந்த 15 வருடங்களாக, மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற 80 குடும்பங்களுக்கு, அரிசி மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. பெறக்கூடிய நன்கொடைகளை பொறுத்து, மேலும் சில குடும்பங்களுக்கு உதவ திட்டமிட்டுள்ளோம்.
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
வெள்ளித் திருநாளில் தர்ம சாலையில் பிரார்த்தனையுடன் 10 கிலோ அரிசி சிப்பம் (உயர்ந்த ரக அரிசி), மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள் (சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம், கடுகு, சோம்பு, வெந்தயம், உப்பு, புளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள்) தர்மச்சாலையில் பிரார்த்தனையுடன் வழங்கப்படும்.

அனைவருக்கும் தருமசாலையில் வாழை இலையில் வயிறார உணவு வழங்கப்படுகிறது.
வெளியூரிலிருந்து வந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடு உள்ள அன்பர்களுக்கு பஸ் / ரயில் போக்குவரத்து கட்டணம் ரொக்கமாக வழங்கப்படுகிறது.

இரு சிறுநீரகமும் செயலிழந்த 8 நபர்களுக்கு தலா ₹5,000/- டயாலிசிஸ் மருத்துவ உதவி ₹40,000/- காசோலையாக வழங்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளின் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு, டயாலிசிஸ் மருத்துவ உதவிக்கு, பாரி போல் வாரி வழங்கும் தீபத்தின் நிரந்தர வள்ளல்களுக்கு நன்றி.