Adyar Cancer Hospital

  • Home
  • Adyar Cancer Hospital
::: பசிதீர்ப்பது பரம புண்ணியம் :::
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி இரண்டு வேளை உணவு

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளின் அட்டண்டர்கள் (கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்து) உணவிற்காக அல்லாடுவதை நேரில் கண்டு, உணர்ந்து, தினசரி தொடர்ந்து உணவு வழங்க முடிவு செய்து, சென்னை வேளச்சேரி தர்ம சாலையில் உணவு தயாரித்து, டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, நேரடியாக மருத்துவமனையில் பிரார்த்தனையுடன் தினசரி நேரம் தவறாது உணவு வழங்கப்படுகிறது.

மேலும் நம் சமுதாய அக்கரையுள்ள ஆத்மார்த்தமான பணிகளை கண்டு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, காலை உணவு மிளகு கஞ்சியாக தினசரி வழங்கப்படுகிறது. நமது உணவின் தரத்தை பரிசோதித்த நிர்வாகம் உணவின் தரத்திற்கு மிக பெரிய சான்றிதழ் வழங்கியிருக்கிறது.

டாட்டா ஏஸ் வாகனத்தில் தினசரி காலை 8 மணி அளவிலும், தினசரி மதியம் 12 மணி அளவிலும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நாள் தவறாது நேரில் சென்று பிரார்த்தனையுடன் இரண்டு வேளையும் உணவு வழங்கப்படுகிறது.

385
தினம் ஒரு உபயதாரர் வரவேற்கப்படுகிறார் :::
அடையாறு மருத்துவமனையில் உணவு வழங்க:

1) காலை உணவு நாள் ஒன்றுக்கு ₹1,500/- (மாதம்: Rs 45,000/-).

2) மதிய உணவு நாள் ஒன்றுக்கு ₹3,000/- (மாதம் ₹90,000/-)

நித்ய தீப தருமச்சாலையின் :::
அன்றாட சமுதாயப்பணிகள்:
  1. காலை 7 மணி: சென்னை வேளச்சேரி தண்டீஸ்வரம் சாலை சந்திப்பில் கூலி தொழிலாளிகளுக்கு தினசரி டாடா ஏஸ் வாகனத்தில் கஞ்சி வழங்குதல்
  2. காலை 8 மணி: நித்ய தீப தருமச்சாலையில் தினசரி துவையலுடன் கஞ்சி வழங்குதல்
  3. காலை 8 மணி: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி டாடா ஏஸ் வாகனத்தில் மிளகு கஞ்சி வழங்குதல்
  4. மதியம் 12.30 மணி: அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் தினசரி டாடா ஏஸ் வாகனத்தில் நேரில் சென்று உணவு வழங்குதல்
  5. மதியம் 1 மணி: நித்ய தீப தருமச்சாலையில் தினசரி வாழை இலையில் மதிய உணவு (சாதம், சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, மோர், ஊறுகாய், வாழைப்பழம்) வழங்குதல்
  6.  மாலை 4 மணி: நித்ய தீப தருமச்சாலையில் தினசரி மாலை சாலையோர உணவு வழங்குதல்
  7.  இரவு 7.30 மணி: நித்ய தீப தருமச்சாலையில் தினசரி வாழை இலையில் இரவு உணவு வழங்குதல்