உலகம் கண்டிராத கொரோனா யுத்தம்:
இயற்கையின் கோரத் தாண்டவம் சில நேரங்களில் இந்த உலகில் வாழும் ஜீவராசிகளை நிலைகுலைய வைத்து விடுகிறது. பூகம்பம், சூறாவளி, சுனாமி. வெயில், அடைமழை, நோய் போன்றவைகளால் பாதிப்புகள் உருவாகின்றன. தானே கஜா புயல், சென்னையில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளம், நீலம் புயல், வர்தா புயல், கஜா புயல் போன்ற பல்வேறு பேரிடர்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, ஆடைகள், மருத்துவம் மற்றும் அந்தச் சூழ்நிலையில் இருந்து அவர்கள் மீளப் பல்வேறு அவசரகால உதவியாக உடனடி ஆகாரம் தருதல், நிவாரண பொருட்கள் வழங்குதல் போன்ற அறப்பணிகளை தீபம் அறக்கட்டளை செய்துள்ளதை தாங்கள் அறிந்ததே.
கொரோனோ வைரஸ் பாதிப்பால் சென்னை, தமிழகம், இந்தியா, ஏன் உலகமே பாதிப்படைந்து மக்கள் சொல்லொணாத் துயரத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
“அரசின் ஊரடங்கு, வீடடங்கு சிறப்பு தான்; ஆனால் சில குடும்பங்களில் உலையடங்கி விட்டதால், குடலடங்க மறுக்கிறதே! (ஏழையின் வயிறு பசிக்கிறதே)”.
தற்போது மனித சமுதாயம் கொரோனா என்ற கொடிய வைரசால், இதுவரை கண்டிராத ஓர் புதிய வித்தியாசமான, கடினமான, மிகக் கடினமான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது.இச்சூழ்நிலையில் மத்திய மாநில அரசுகள், பல்வேறு துறை அதிகாரிகளும், ஊழியர்களும் அற்புதமாக செயல்பட்டு, மக்களை பல்வேறு வகைகளில் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், பசிக்காக கஷ்டப்படும் மக்களுக்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றவர்களுக்கு, ஆங்காங்கே மனிதநேயம் கொண்ட அன்பு உள்ளங்களால், அவரவர் சக்திக்கேற்ப, தனித்தனியாகவும் அமைப்புகளாகவும், அரசாங்க அனுமதியோடு உணவை, பொட்டலங்களாக கொடுத்து, தேடிச்சென்று பசியை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் பரவல் பேரிடரால் போர்க்கால அடிப்படையில் கீழ்கண்ட நித்ய தீப தருமச்சாலைகளில் தொடர்ந்து பசித்தவர்களுக்கு சில நல் உள்ளங்களின் பேராதரவோடு தினசரி ஆயிரக்கணக்கானவர்களுக்கு ஆகாரம் கொடுத்து பசியாற்றிவித்தல் செய்து கொண்டிருக்கிறது.
- சென்னை வேளச்சேரி நித்ய தீப தர்மச்சாலை
- மதுராந்தகம் நித்ய தீப தர்மச்சாலை
- கொஞ்சிமங்களம் நித்ய தீப தர்மச்சாலை
- தேவதானம் பேட்டை நித்ய தீப தர்மச்சாலை
- கங்காவரம் நித்ய தீப தர்மச்சாலை
- வாழைப்பந்தல் நித்ய தீப தர்மச்சாலை
தினசரி நடைபெறும் தொடர் அன்னதான ஜீவகாருண்ய திருப்பணியை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவருளால், திரு அருட்பிரகாச வள்ளலார் ஐயா தோன்றாத் துணையாக இருந்து கொண்டு நடத்திக் கொண்டிருக்கிறார்.
கீழுள்ள இணைப்புகளை கிளிக் செய்வதின் மூலம் கரோன காலத்தில் தீபம் செய்துள்ள பணிகளை விரிவாகக் காணலாம்:
கொரோனா காலத்தில் தீபத்தின் சேவைகளைக் காண: https://bit.ly/dtcovid19
புகைப்படத் தொகுப்பு: https://bit.ly/dtcovidpg
வீடியோ: https://bit.ly/dtcovidvi
பிறர் பசியைப் போக்க வேண்டும்,சமுதாயத்திற்கு உதவ வேண்டும், தர்மம் செய்ய வேண்டும் என்ற தெய்வீக குணங்களை கொண்ட தர்மவான்கள், தங்களுடைய நன்கொடைகளை, அருள் நிதியை தீபம் அறக்கட்டளை வங்கி கணக்கில் வங்கி பரிமாற்றமாக மட்டுமே செலுத்துமாறு வேண்டுகிறோம். வங்கி விவரங்களை கீழே கொடுத்துள்ளோம்.