2020 & 2021 கொரோனா காலங்களில் நிவாரண பணிகள்
கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலங்களில், ஆதரவற்று சாலையோரம் வசிப்பவர்கள், தினக்கூலி அடிப்படையில் வேலைக்குச் செல்றும் கூலித் தொழிலாளர்கள் என தினசரி தருமச்சாலையைத் தேடி பசியுடன் வருபவர்களுக்கு, உணவு பொட்டலங்கள், தண்ணீர் பாட்டிலுடன் வழங்கப்பட்டது. அன்னதானப்பணிகள் மேலும் விரிவாக்கப்பட்டு வேளச்சேரி தண்டீஸ்வரம் கோயில் அருகில் தினசரி மதிய உணவு வழக்கப்பட்டது. டாட்டா ஏஸ் வாகனம் மூலம் வேளச்சேரி, தரமணி, அடையார், திருவான்மியூர், பெசன்ட் நகர், மைலாப்பூர், லஸ் கார்னர், கச்சேரி சாலை, லைட் அவுஸ், மெரினா கடற்கரை, சாந்தோம், பட்டினப்பாக்கம், விவேகானந்தர் இல்லம், கஸ்தூரிபாய் மருத்துவமனை பகுதிகளில் உணவு பொட்டலங்கள் தண்ணீர் பாட்டில்களுடன் வழங்கப்பட்டது. தீபத்தின் தன்னார்வத் தொண்டர்கள் இரண்டு சக்கர வாகனங்களில் சாலையோரம் உணவில்லாமல் பசியோடு இருப்பவர்களை தேடிச்சென்று தினசரி நூற்றுக்கணக்கான நபர்களின் பசியை ஆற்றினர். முகாம்களில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. தருமச்சாலையில் தினசரி காய்கறிகள் வழங்கப்பட்டது.