2018 – கஜா புயல்

  • Home
  • 2018 – கஜா புயல்
2018-கஜா புயல்

15.11.2018 அன்று கஜா புயல் டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூன்று கட்டங்களாக 16 டன் நிவாரண உதவி தீபம் உதவியது.

25.12.2018 – மூன்றாம் கட்ட நிவாரணப் பொருட்கள் 3 டன் அரிசி கோடியக்கரைப் பகுதி மக்களுக்கும், வேதாரண்யம் கடற்கரைப் பகுதி குடிசைவாழ் மக்களுக்கும் வழங்கப்பட்டன.

20.11.2018 – முதல் கட்ட நிவாரணப் பணியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் பசிப் பிணியைப் போக்க வேளச்சேரியில் இருந்து ஒரு லாரியில் அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள், புத்தாடைகள் உள்ளிட்ட 7 டன் நிவாரணப் பொருட்களுடன் நாகப்பட்டினம் அதன் சுற்று வட்டாரங்களுக்குச் சென்று, நான்கு நாட்களாக கிராமம் கிராமமாக கொட்டும் மழையில் 16 சேவடிகளின் உழைப்பால் சென்று உணவு வழங்கப்பட்டது.

 01.12.2018 – இரண்டாம் கட்ட நிவாரண பணியில் 6 டன் நிவாரண பொருட்களுடன் 3 படகுகள் மூலம் வேதாரணியம் சென்று, 150- க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 3000 மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன