இயற்கை சீற்றங்களில் சமீபத்தில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களையே கஜா புயல் புரட்டி போட்டுட்டுள்ளதை நாமனைவரும் அறிவோம்…தானே புயல், வார்தா புயல், சென்னை பெருமழை வெள்ளத்தில் தீபம் அறக்கட்டளை சேவை செய்தது போல் தற்போது கஜா புயலையும் தீபம் எதிர் கொண்டது.
சென்னையில் இருந்து அன்னதான பொருட்களுடன் பல்வேறு நிவாரண பொருட்களையும் அரிசி – 200 மூட்டைகள் (5 டன்), IIT Tஷர்டுகள், டவல்கள், மெழுகுவர்த்திகள், பிரட்டுகள், பஸ்கட்டுகள், வாட்டர்பாட்டில்கள், வாட்டர்பாக்கட்டுகள், போர்வைகள், ஒரே சமயத்தில் 5000 பேருக்கு சமைக்க தேவையான சமையல் பாத்திரங்கள்,6 அடுப்புகள்,15 கேஸ் சிலிண்டர்களைசுமந்து கொண்டுகடந்த 21-11-2018 அன்று இரவு (புதன்கிழமை) நாகப்பட்டினம் புறப்பட்டது.